காதல் வசப்படாமல்..
அன்பு வலிமையோடு
நம்மை ஆட்கொண்டு..
உரிமை மிக்க உறவாக
உருவெடுத்து நிற்கிறதே
ஓர் உணர்வு..!
இதை தாண்டியும்
ஓரிதம் தேவைதானோ
இந்த இதய துடிப்பிற்கு..!!
என் இனியனே..!!!
-
காத்திருப்பே
களைத்து போயினும்
காலம் கடந்தும்
நானிருப்பேன்
உன் கனவுகள்
சுமக்க..!!
-
ஆளுயரத்தை அரையாக்கி
தன் காலுயர மகனின்
முகம் பார்க்க முட்டியிட்டு
அரை மணி கூட ஆயுளிள்ளா
அச்சட்டைக் கையின் மடிப்பை
சிறு சுருக்கமின்றி
அழகாக்கிட்ட ஓர் தந்தை!!
ஆண்களை அளவிடும்
என் பார்வையின்
ஆகச் சிறந்த
ரசனை இது...!!
-
தோழனே..!!
உன் தோள் சாய்ந்து
சோக கதையெல்லாம்
பகிர்வ தெப்போது..?!
காதலனே..!!
உன் கரம் கோர்த்து..
வார்த்தை தொலைத்து..
உன் இருப்பில்
நிறைவ தெப்போது..?!
கணவனே..!!
நம் கூடலுக்காய்
அவதரித்த
ஊடலின் திரையை
அவிழ்ப்ப தெப்போது..?!
-
காத்திருப்பின்
விதியா..?!
இக்காலநிலையின்
சதியா..?!
ஏக்கங்களாய்
பற்றி எரியும்
உன் எண்ணங்கள்..!!
-
என் இனியனே..
நான் தொலைவில்
இருக்கையில்
தொலையாதே,,
இம் மாயை மௌனத்தில்..!
உன் னெண்ணங்கள்
என்னவென் றெண்ணியே
தொலைகிறேன் நானும்
உன்னோடே..!!
-
என் நெடுந் தேடலின்
முடிவை கண்டு விட்டேன்
உன்னில்..!
இனியேனும்
உன் அன்பின்
தேடல் துவங்கட்டுமே
என்னில்..!!
-
அடிக்கடி..
சுயநலத்திற்குள்
நின்று கொண்டு
வேடிக்கை பார்க்கும்
நாமெல்லாம்,,
எவ்விழப்பிற்கும்
பரிதாப பட கூட
அருகதையற்ற
அற்பங்க ளென்று..!!-
"காதல் என்ற ஒன்றே இல்லை"
என்பதில் குழம்பி...
"உண்மை காதலை நான்தான்
இதுவரை கொண்டதில்லை"
என்பதில் தெளிகிறது....
ஏமாற்றத்திற்கும்
ஏக்கத்திற்குமான
இடைவெளி...!!
-