உன் நாசி தொட்டு
நுரையீரலுக்குள் நுழையவா....
காதலாக மாறி
உந்தன் உயிருக்குள்
உயிராக உருமாறவா......
-
உன் வாசனை
மூச்சுக் காற்றாய்
மூளைக்குள் புகுந்து
முகுளத்தை மூழ்கடிக்குதே
முத்தக் கடலில்.....-
உந்தன் நினைவுகள்
மூச்சு காற்றாய்
மூளைக்குள் சென்று
முகுளத்தை செயல்படவிடாமல்
மூழ்கடிக்குதே முத்தக்கடலில்......
-
எனக்குள் இருக்கும் காதலை
?
உன் முகம் நோக்கி
விழி பார்த்து
காதலை சொல்லுமே
எந்தன் விழி இரண்டும்....-
எனக்குள் இருக்கும் கவலைகளை
என் கண்ணீரோடு காணலாய்
கரைந்து செல்லடுமே......
அம்மா-
வானில் மின்னும்
நட்சத்திரத்தை தாவி பிடித்திருப்பேன்
அதற்குள் பொழுது விடிந்தது.....-
உந்தன் விரல் பிடித்து சாலை கடக்க....
ஒரு நொடி போதுமே
உந்தன் விழி இரண்டும் இசைமீட்ட....
ஒரு நொடி போதுமே
உந்தன் மூச்சு காற்றும் என்னை முத்தமிட....
ஒரு நொடி போதுமே
உந்தன் தோளில் தலை சாய்க்க...
ஆனால்,
ஒரு நொடி போதுமா
போதாதே......
உன்னோடு எந்தன் காதலும் கனவும்
இரண்டற கலந்து
நம் காதல் சிறகடித்து பறக்க
ஓர் யுகம் வேண்டுமே....-
இரவில்
நீ தனித்திருக்க,
தங்க நிறமாய் வெந்தனில்
நான் தவித்திருக்க,
தங்கி செல்வோம் இதயக்
கூட்டிலே தயக்கமின்றி.....-