Death....
Which brings absolute Peace and pleasure to a soul in the spiritual world,
Where no more drama of human kind takes place.-
Blooming writer
உங்களுக்கு ஒன்று தெரியுமா
உயிரின் உணர்வு நிலை
என்றுமே அழுத்தம் நிறைந்தது
இவ்வுணர்வு நிலைகளை
பூசி மொழுகவே
மனிதன் கண்டுபிடித்தது
இயற்கையுடனான இணக்கம்
அன்பு அரவணைப்பு
பாட்டு பாவை
குடி கூத்து
என இன்னும் பல
இவை அனைத்தும்
திடீரென ஓர்நாள்
தொலைந்து போக
நேர்ந்தால்
இம்மண்ணில் வாழும்
பல மனிதர்களின்
மனநிலை
மரணத்தை வேண்டி நிற்க்கும்
நிலை தான்.
-தினுப்ரியா. ம
-
என்
அதிகாலையின் தொடக்கமும்
அந்திமாலையின் முடிவும்
உன் இதழின் இஸ்பரிசத்தால்
இன்பம் காண்கிறது❤️-
விடியலுக்கான சூரியன் இருக்குமிடமும்,
விடிந்தபின் அச்சூரியனுள்
தான் எங்கு உறைந்திட வேண்டுமென்றும்.-
உன் உருவம் தான்
கேட்கும் ஒலி எல்லாம்
உன் ரீங்காரம் தான்,
என் தூக்கத்தை கொல்ல
வந்த கொலைகாரன் நீ
கொஞ்சம் விடுதலை தான்
கொடுத்துவிடேன்
உன் தொல்லைகளில் இருந்து...
#கொசு-
முழுதாய் தொலைந்திட வேண்டாமென
மதி சொல்லும் வழி நடக்கிறேன்,
இம்முள் பாதையினைக்
கடந்திட...
-
எனை வந்தடைந்த
அவமானங்களையும்
துரோகங்களையும்
சேமித்து வைத்திருக்கிறேன்,
வெற்றி எனும்
மரம் வளர
விதையென விதைத்திட.-