தேநீர் அருந்த வந்த எனக்கு தரிசனம் தந்த தேவதையே, உன் கண்களின் கரிசனத்தால் காதல் வரம் தருவாயா..!
-
Authored a book, A 10 step guide to LinkedIn Personal Brandin... read more
என்ன பாவம் செய்தேனோ முன் ஜென்மத்தில், நான் காதல் கொடுக்க நினைக்கும் இதயங்கள் எல்லாம் கானல்நீராய் கரைந்திடுதே!
-
அன்பே நான் உன்னை ரசிக்க
ஆரம்பித்த நொடி முதலே
நான் உன் இதயத்தில் சிக்க
ஆரம்பித்துவிட்டேன்!-
வாழ்வில் காதல் என்ற அத்தியாயம் இனி வேண்டாம் என்று கல்லாக இருந்த என் மனதை, ஏனோ கார்மேகமென வந்து காரணமே இல்லாமல் தன் கருவிழியின் பார்வை மழையால் கரைத்துவிட்டு செல்கிறாள்!
-
நிஜ வாழ்வில் வாழ்ந்திட முடியாத வாழ்க்கையை கனவிலாவது வாழ்ந்திட வேண்டும் என்று எண்ணியே நிழலுலகை தேடி அலைகின்றன பல இதயங்கள்.
-
பெண்ணே என்ன மாயம் செய்தாய் நீ? என்னுடன் பிறந்த என் நிழலும் கூட என்னை விடுத்து உன்னுடன் வரவே துடிக்கின்றதே!
-
என் வாழ்வின் அங்கமாகும்
என்னவள், நான் கண்களைத்
திறக்கையில் மட்டும் கானல்
நீராய் கரைவது என்ன விந்தையே!-
அனைத்தும் அன்றே சொல்லப்பட்டிருந்தால், இன்று
நான் இல்லாமல் தவிப்பது
எனக்கு கிடைத்திருக்குமோ!-
வாழ்வில் வெல்லும் வரை தோற்பதில் தவறில்லை, ஆனால் தோல்வியே நம் வாழ்க்கை ஏற்கும் நிலையில் வாழாது இருத்தல் நன்று!
-