அனைவரும் ஒன்றென்று அவர்கள் கருத.
அதில், திணிக்க வேண்டாம் வேறுபாடுகளை...-
அன்பை பகிர்ந்து
ஆறுதலாய் கூட நின்று
இனிய சொற்கள் கொண்டு
ஈதல் கற்பித்து
உரிமையாய் அதட்டி
ஊக்கம் அளித்து
எண்ணங்களை உயர்த்தி
ஏற்றம் பெற
ஐயம் கலைத்து
ஒப்புரவு வளர்த்து
ஓடமாய் கரை சேர்க்க
ஔடதமாய் அறிவுப் பசி போக்கிய
ஆசிரியர்கள் அனைவருக்கும்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
-
இசையின் வேந்தனே
சங்கீதத்தின் அமுதசுரபி!!!
ஏனோ உன்னை பூமித்தாய் அவளுடன் அணைத்துக்
கொண்டால்...
அவளுக்கும் உன் குரல் மழையில் நினைய ஆசைப்போல்...
நீயோ, ஃபீனிஸ்!
இந்த காலத்தின் விளையாட்டில்,
"புதிய மனிதனாய்" உயிர்த்தெழு
பாடும் நிலாவெ...-
ஆசிரியர்
பேதையாய் இருந்த என்னை
பேரறிஞனாய் மாற்றிய பெருமித வல்லலே !!!
உன் சொற்பொழிவிலே
நான் சொர்க்கம் கண்டேன் !!!
உன் அறிவுரையிலே
ஆனந்தம் அடைந்தேன் !!!
காலத்திலே கற்றுகொடுத்தாய் கல்வியிணை
ஆழமாய் எடுத்துரைத்தாய் அன்பினை
சொன்னாய் ஒழுக்கத்தினை
இத்தனையும் அள்ளிக்கொடுத்த உனக்கு
என்ன கைமாறு செய்வேனோ...
உன்னால் அழகானது என் வாழ்க்கை♥
-
கூண்டிலிருந்த பறவை
விழியால் மொழிந்தது:
கஷ்டம் தான்
ஆனால் ,
நம்பிக்கை கொள்
விரைவில்,
விடுவிக்கப்படுவாய்யென்று!!!!
கொரோனா பரிதாபங்கள்..!
-
கொரோனா:
சிறு குழந்தையாய் பிறந்த நீ
ஏனோ அரக்கனாய் மாறி எவ்வித பாகுபாடுமின்றி மனித உயிர்களிடம் தாவிக்கொண்டாய்!!!
உலகையே அடிபனிய வைத்தாய்!!!
பேரறிவாளர்களையும் பதிலின்றி தவிக்கச் செய்தாய்!!!
உன் பசி தீர்க்க ஏனோ பட்டினியாக்கினாய் இவ்வுலகையே..!
உயிர் கொல்லியாய் உலா வரும் உனக்கு;
இன்னுமா,
தீரவில்லை உன் " உயிர்த்தாகம்"???
-