மாவீரன் அலெக்சாண்டரை,
அவன் வாழ்க்கை,
வெற்றிகளைப் படிக்கும்
இவ்வுலகம் ஏனோ......
அவன் தன் வாழ்வின்
இறுதி நாட்களில்
இவ்வுலகைப்பற்றி
கற்றவற்றை
மறந்து விடுகிறதே!!
ஏன்???-
Devi Balakrishnan
(தேவி பாலகிருஷ்ணன்)
43 Followers · 27 Following
https://www.yourquote.in/devi-balakrishnan-33bj/books/ituvrai-iraittvai-e05
Joined 31 December 2018
20 AUG AT 22:13
7 JUL AT 22:17
தெரியுமனைத்தும்,
வேறொரு
தருணத்தில்
அறியாத ஒன்றை
உனக்கு
உணர்த்தும்
அதுவே
உனக்கு
ஆசானாகும்!!-
7 JUL AT 22:13
தண்டனைகள்
தரும்
வலிகள்
உருவாக்கும்...
பக்குவப்பட்ட
மௌனம்
அல்லது
கேட்கப்படாத
நியாயம்!-
28 JUN AT 20:44
புத்தனும் நானும்!!
துன்பத்திற்கு காரணம் தேடி அவனும்,
இன்பத்திற்கு காரணம் தேடி நானும்
எதிரெதிர் துருவங்களில்
பயணித்தோம்!
இருவரும்
சந்தித்த வேளையில்,
ஒன்று மட்டும் புரிந்தது,
தேடலில் இல்லை தேவைகள்,
மனமே மாமருந்தென!!
பாதையை உருவாக்கவும் வேண்டாம்,
அடைக்கவும் வேண்டாம்!
பயணித்தால் போதுமென!!-
13 JUN AT 15:22
இலட்சியங்கள்
நிறைவேறுவது
எப்போது?
இன்றைய இலட்சியம்
நாளைய மாற்றம்!
இன்றைய அலட்சியம்
நாளைய ஏமாற்றம்!!-
13 JUN AT 15:18
வந்தவற்றை நினைக்காமல்,
வருபவற்றை எதிர்பாராமல்,
இருப்பவற்றை
மகிழ்வித்து
மகிழ்வதே
இன்பம்பெறும்
வழியென
உணர்தல் வேண்டும்!!-