Daniel John Paul   (Dj Paul)
142 Followers · 64 Following

கற்றது கையளவு
Joined 23 June 2017


கற்றது கையளவு
Joined 23 June 2017
17 OCT 2023 AT 13:08

You can never stop crying, just because there is no one to console you.
It pours like rain in a no man's land without being heard, felt or seen.

-


16 MAR 2022 AT 0:06

மாலைவெயில் இறங்கும் பொழுதில், நான் என் மொட்டை மாடி ஏறினேன்;
ஈரத்தென்றலின் இசைவுகளிடையே என் தனிமையும் வந்து அமர்ந்துகொண்டான்;
வாடகைக்கு வாங்கி வந்த இன்பத்தை எல்லாம், கண்ணிமைக்கும் நேரத்தில் செலவழித்துவிட்டேன்;
இல்லாத சோகம் எல்லாம் கூடி சூழ்ந்துகொள்ள, கீழிறங்கிய என் கனத்த இதயம்
ஏணி படிகளையும் உடைத்துவிட்டது.
இனி கடனுக்கு கூட கிடைக்காத தூரத்தில்
என் வீட்டு மொட்டை மாடி.

-


4 JUN 2021 AT 1:13

என் கழுத்தை நெறிக்கும்
சாதிக்கயிற்றை, உங்கள் உதிரம்
வடியும் கைகளால் அவிழ்க்க முடியுமா?

பெண்ணின் சுதந்திர கனவுகளை,
உங்கள் கௌரவ சந்தையில்
விலைபேசும் அகந்தை குறையுமா?

அன்பென்னும் ஒற்றை இறைவனை
பாதுகாக்க, இங்கே உங்கள்
புனித மதங்கள் திரளுமா?

என் சமத்துவ சகதியில் கால் பதிக்க,
உங்கள் போலி வெண்மையும்
என்றோ ஓர்நாள் துணிவு கொள்ளுமா?

-


29 MAY 2021 AT 1:03

The little white Moon is a nomadic witch,
who heals your broken soul without a hitch.

-


22 MAR 2021 AT 1:36

வாசகர்களற்ற என் வாழ்க்கை பக்கங்களில் வலிகள் மட்டுமே சூழ்ந்திருக்க,
தூசிதட்டி துன்பம் துடைக்க எந்த தூரிகைக்கும் மனமில்லை;
தூர நின்றே எடைபோடம் இந்த மானுட மனங்களுக்கு,
கிழிந்து போன என் மன உறை திறக்க, கைகள் ஏனோ எட்டவில்லை.

-


3 JAN 2021 AT 19:15

How to be humane?

Liberate your soul from all the toxic stereotypes the world has chained you with.

-


11 NOV 2020 AT 22:13

It is easy,
for a man to be sexist.
for a savarna to be casteist.
for a bhakt to be islamlphobic.

But it's never easy,
for a woman to be stereotyped.
for a dalit to be demeaned.
for a muslim to be lynched.

-


10 OCT 2020 AT 2:23

சர்க்கரை துகள்களை தேடிச்செல்லும் எறும்புகள் போல, உன் நினைவுகளை சுற்றியே என் மனம் திரிய காண்கிறேன்;
நாம் மகிழ்ந்த நொடிகளை பருக்கைகளாய் மொய்த்து, காதல் ஈந்த வலியோடு மெல்ல சுமந்து போகிறேன்;
கனமென்ற பொழுதும் கைவிட மனமின்றி, சுகமாய் மீண்டும் ஏந்திக்கொள்கிறேன்;
என் தனிமையின் வெறுமை தீர்க்க, உன் ஞாபக்தை மட்டுமே சேர்த்து வைக்கிறேன்.

-


23 JUL 2020 AT 4:20

அரண்மனை வீட்டுக் கண்ணாடிக்கு அழுகை என்பது பொய் தான்;
சில்லறையில்லா கைப்பைக்கு சிரிப்பு என்பதே பொய் தான்;

வெயிலில் மிளிரும் ஊருக்கு தீண்டாமை என்பது பொய் தான்;
மழையில் கரையும் சேரிக்கு சமத்துவம் என்பதே பொய் தான்;

ஆட்சியாளும் தலைவனுக்கு வாக்கு என்பது பொய் தான்;
வாக்களித்த தொண்டனுக்கு நீதி என்பதே பொய் தான்;

ஆணின் முறுக்குமீசை மயிருக்கு கற்பு என்பது பொய் தான்;
பெண்ணின் கால் சங்கிலிக்கு விடுதலை எனபதே பொய் தான்.

-


21 JUL 2020 AT 2:51

ஆறடி குழியில் அமைதி காண,
தீரா ஆசைகள் எதற்கு?
உழைப்பு மட்டுமே உணவு ஈந்திட,
உனக்கு யோகம் எதற்கு?
இருவர் மனங்களை காதல் இணைத்திட,
மாலைகள் எதற்கு?
அகத்தில் அத்தனை அழகிருக்க,
முகமூடிகள் எதற்கு?
போர்கள் அமர்த்த நட்பே துணையாய்,
துப்பாக்கிகள் எதற்கு?
உலகார் யாவும் ஒரே குடி என்றால்,
இத்தனை சாதிகள் எதற்கு?
கூடி வாழ்வதில் கலகம் சேர்க்கும்,
இந்த மதங்களும் எதற்கு?
மனிதம் ஓங்க அன்பு போதுமேனில்,
கடவுள் தான் எதற்கு?

-


Fetching Daniel John Paul Quotes