Dakshayani Aishu   (Dakshi (தாக்க்ஷி))
3 Followers · 5 Following

Joined 18 August 2019


Joined 18 August 2019
7 MAR 2024 AT 22:29

தாய்மை பருவம் அல்ல: பக்குவம்

தன்னால் வலிகள் தாள முடியதென்றவள் -
தன்னோடு தன் மகவின் வலியையும் சுமக்கும்
பக்குவமே தாய்மை!!

தன்னால் இவை இயலாதென்றவள், இன்று
தானியங்கியாய் மாறிய அற்புதம்,
தாய்மையின் பக்குவம்!!

-


10 JAN 2023 AT 22:43

தனித்திருக்கும் வேளையிலும்
தவித்திருக்கும் வேளையிலும்
மனம் தேடுவது உற்ற ஆறுதல்

யாதொரு குறைவின்றி
யாவரும் உடனிருக்க
உயிரற்ற பதுமையின் தேடல் காதல்

-


10 JUL 2022 AT 23:24

நீள் இரவில்
வற்றாது வழியும்
கண்ணீர்

-


27 JUN 2022 AT 16:23

உன்னோடு என்னுடனான காதல்
எழுத வார்த்தைகள் தேடினேன்
பிரித்தரியா பிணைப்பைப் போல்
என் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்
நம் காதலே உயிர் பெற்று
எம்முள் எதை கொண்டு
உன் காதலை கூறுவாய்
என்று கேட்ட போது
என் உயிர் கொண்டு என்றேன்

-


8 NOV 2021 AT 18:46

என்னை மட்டும் உன்னிடத்தில் தொலைத்தேன்
என்று நினைத்திருந்தேன் 😌
எழுத நினைத்த வார்த்தைகளும்
என் காதல் 💕 சொல்ல உன் முன்னின்று
வர மறுத்த காரணம் புரியும் வரை💌

-


9 JUN 2021 AT 20:58

சென்றிடு என்று அவள்
சொன்னதைக் காட்டிலும்;

இங்கேயே இருந்திடு
சீக்கிரம் வருகிறேன் - என்றொலித்த
கொலுசொலி மட்டும் அவன்
செவிகளைச் சேர,

சொல்லாமல் மலர்ந்தது காதல்❤

-


21 MAY 2021 AT 20:44

யுகங்கள் கடந்து வாழ்ந்தால்
மகான் என்பராம் மக்கள்...
உன்னை பிரிந்து இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஓர் யுகமாகவே தோன்றுகிறது!!

ஆனால் மகானல்ல நான் - பெண்ணே,
உன்னருகே காதலோடு இருக்க
ஆசை கொண்ட மானிடன் ஆவேன் நான்❤

-


19 MAY 2021 AT 22:17

காலமே..உன்னிடத்தில் அன்பாய்
காதல் செய்ய ஒருவருமில்லை தான்,
ஒப்புக் கொள்கிறேன்!! ஆனால்,
அக் குறையை எம்மிடத்தில்
காட்டுவதேன்!!

இரவுகளில் மட்டும்,
இவ்வளவு வேகமாய் கரைகின்றாய்!!

-


5 MAY 2021 AT 20:02

அவளது உளறல் பேச்சின் அன்பும்💕

சில நொடி மௌனம் உரைத்த காதலும்💞

அவன் இதயம் மட்டுமே அறிந்த மொழியாயின💖

-


27 APR 2021 AT 19:00

விண்மீன் பல இருந்த போதும்,

என் வாழ்வின் வெளியில் என்றும்; ஒளி

வீசும் ஒற்றை வெண்ணிலா - அவள் ❣

-


Fetching Dakshayani Aishu Quotes