-
என்னவன்
எனதானவன்
என்னில் கரைந்து களவாடிய
அந்த முதல் சந்திப்பின்
நீங்கா நிமிடங்களை....-
கைக்கடிகாரத்தின்
நொடிமுள் நகரும்
சத்தம் கூட
செவிதழுவி நிற்கும்.....
-
தலைமுறை தலைமுறையான
நம் பாட்டன் முப்பாட்டனின்
வரலாற்றை தெரிந்து கொள்ள
ஆவலும் இல்லை
அதற்கான நேரமும் இல்லை..
இன்றைய தலைமுறையிடத்தில்....
-
தீட்டி கொண்டிருக்கிறேன்
என் மனகுறிப்பில்.
திசையறியா செல்லும்
பறவையாய் என் பயண
குறிப்புகளை....!-
ஓடோடி கொண்டிருக்கும்
காலங்களோடு சேர்ந்து
நின் கரம்சேர துடிக்கும்
என் ஏக்கங்களும் கரைந்துதான்
போகின்றன உருவமில்லா
உணர்வுகள் எனும் பெயரில்......-
என் வரிகளின்
அர்த்தங்களுக்கும்
உயிருண்டென்பதை
உணர்கிறேன்..
சேர்த்து வைத்துள்ள
ஒட்டுமொத்த அன்பையும்
சேர்க்கும் இடம் அறிந்து
என் காதல் கூற வந்த தருணம்
முந்திக்கொண்டதடா என் மௌனம் ........-
நீ உடன் இருந்திருக்கலாம்
என்ற நினைப்பு
வரும்போதெல்லாம்
நினைவில் மட்டுமே
உன்னுடன் நான்
நாமாக உணர்கிறேன்.......-