உங்கள் வாழ்த்துகளோடு
16 வது ஆண்டில் நமது கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறேன்...
என்னை எப்போதும் ஊக்கப்படுத்தும் தலைவர், துணைத் தலைவர்,முதல்வர், எம் தமிழ்த்துறைத் தலைவர், சக பேராசிரிய நண்பர்கள், மாணவச் செல்வங்களுக்கு நன்றி-
ஒவ்வொரு அப்பாவித்தனங்களுக்குள்ளும்
ஒரு அடப்பாவித்தனங்களும்
ஒளிந்திருக்கலாம்
சதா பாரதி
-
வாழ்க்கை
நீங்கள் அணுகும் முறையிலேயே
அமைந்து விடுகிறது ...
மகிழ்ச்சியோடு அணுகுங்கள்
சதா பாரதி-
முதல் புறக்கணிப்பிலேயே
முடிந்து போகாதீர்கள் ...
தொடர்ந்து எழுங்கள்
தோல்விகள் ஓடிவிடும் .
சதா பாரதி
-
உங்களைத் தவிர
வேறு யாராலும்
உங்களுக்கு
மகிழ்வையோ
ஆறுதலையோ
தந்துவிட இயலாது
சுயமே நலம்
சதாபாரதி
-
உண்மை எப்போதும்
இயல்பாக வரும்
பொய்களுக்கே
அலங்காரம் தேவைப்படும்
சதாபாரதி-
எழுதி அழித்திட்ட பதிவுகளே
பெரும்பாலும்
உண்மையைச சொல்வதாக இருந்திருக்கிறது
சதா பாரதி
-
தேர்வில்
வெற்றி பெற்றவர்களுக்கும்
வாழ்வில் வெற்றியடைய
காத்திருப்பவர்களுக்கும்
வாழ்த்துகள்
மதிப்பெண்கள் மட்டுமல்ல வாழ்க்கை...
சதாபாரதி-
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
வெற்றி உங்கள் முகவரி தேடட்டும்
சதாபாரதி-