படித்தவுடன் புரிந்து கொள்ள
அவள் என்ன கதையா?
உச்சி முதல் பாதம் வரை
அங்கம் முழுவதும் அடி அடியாய்
பல உவமைகள் நிறைந்து வழியும்
கவிதை பெட்டகம்டா அவள்
அவசரமின்றி அனு அனுவாய்
அவள் ஆறடி உடலை படித்து பார்க்க
சற்று நேரம் எடுக்கதான் செய்யும்-
எனக்கு பொறாமை தான்
அவள் அழகை கண்டு அல்ல
என்னை விட அதிகம் உரசும்
அவள் கை வளையல் கண்டு
-
பெருவாழ்வென்றெல்லாம் வேண்டாம் பற்றிய கைகள் விலகிடாத
ஒரு வாழ்வு போதும்-
அம்மாவின் உலகம்
அப்பாவின் மறுஉருவம்
மகளின் அரசன்
மகனின் ஆசான்,
மீசை வளரும் முன்னே
தன் ஆசைகளை தளர்ந்தி
தன்னை முன்னிறுத்தி கொண்டவன்,
காடு மேடு அலைந்தும்
கறைகள் பல படிந்தும்
கொட்டும் மழையில் நனைந்தும்
கட்டும் துணியும் கிழிந்தும்
கஷ்டங்கள் பல பெற்றும்
பட்டங்கள் பல பெற வைத்தவன்,
கண்ணீரை வெளிக்காட்ட தெரியாத கஞ்சன் அவன்...
பாசத்தினை பங்கு போட தெரியாத பகைவன் அவன்...
எதிர்பார்ப்புகள் அற்ற ஏமாளி அவன்..
தனக்கென எதையும் கேட்டு வாங்கும் தைரியம் அற்றவன்...
தன் பிள்ளைகள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுக்கும் தைரியம் மிக்கவன்...
தன் தூக்கம் தொலைத்து குடும்பத்தினை
தோளில் தூக்கி சுமப்பவன்.....
அவன் மிதிவண்டியும் தேய்ந்திருக்கும்
மிதித்து உழைத்த உழைப்பில்,
அவன் காற் செருப்பும் கரைந்திருக்கும்
ஓடி உழைத்த உழைப்பில்,
இப்படி
தனக்கென எதையும் செய்யாமல்
தன் வாழ்வையே தன் குடும்பத்திற்காக
தியாகம் செய்யும் தியாகி போன்ற ஆண்களுக்கு(அப்பாவுக்கு)சமர்ப்பணம்🙏🙏🙏-
சாதியை சங்கறுப்போம்
கருவறை கடந்து கனவுகள் பல சுமந்து
வகுப்பறையில் வாசம் நுகர
வலம் வந்த என்னை
நீ தெருநெடுவே காலணி இன்றி
கடந்து வா என்றாய்...
பள்ளி சென்றேன்
தீண்டாமை ஒரு போதும் வேண்டாமே
என்று சொல்லி
என்னை தீண்டாமல்
தனியே அமரவைத்தாய்...
கல்லூரி சென்றேன் இடமில்லை
என்று சொல்லி இடஒதுக்கீட்டில்
இன்னல் செய்தாய்...
வேலை தேடி வெளியூர் சென்றேன்
வேதனையோடு வெந்தும் போனேன்..
காதலில் கரைந்து காத்திருந்தேன்
காவு வாங்கும் காசால் வென்றாய்...
காக்கும் தெய்வத்திடம் கண்ணீர்
வடித்தேன் கரை படிந்தது எங்கள் கலசம் என்று தரையில் தள்ளினாய்...
விதி என நினைத்து விழுந்து விடலாம்
என்று குளத்தை தேடினேன்
இது எங்கள் கு(ல)ளத்தோருக்கு மட்டும்
என்று அதிலும் குளறுபடி உண்டாக்கினாய்...
கயிற்றால் என் கதை முடியும் என்றிருந்தேன்
இக்கையிறு அறுவதால் எப்பயனும் இல்லை அக்கையிற்றை(சாதி பூணூல்)
சங்கறுக்காமல் எதையும் சாதித்து
விடமுடியாது என்றுணர்ந்தேன்
அதனால் அறுத்துவிட்டேன் தூக்கு கயிற்றை
மாற்றிவிட்டேன் என் முடிவை
-
இரு சக்கர மிதிவண்டியின்
இரு கை(பிடி) யின் இடையே
ஒற்றை கம்பியின் நடுவே
உக்கார்ந்து
ஊரை வலம் வரும்
ராஜ தோரணை
சொகுசு காரில் பயணிக்கும் போது
மீண்டும் கிடைக்கவில்லை
-
ஆதவன் கண்டு
உருகும் பனித் துளிகள்
போல
நானும் உன்னை கண்டு
உருகி தவிக்கிறேன்
உன் மீது காதல் கொண்டு-