சக்கரவர்த்தி தீபன்   (ஸ்ரீ தீபன்)
260 Followers · 410 Following

Joined 6 October 2019


Joined 6 October 2019

நிழலற்ற நிஜமாக
சிலரின் காதல்
நிஜமற்ற வெறும்
நிழலாக பலரின் காதல்

-



குளுகுளு மழை
அதனால் சூடு பிடித்தது
'தேனீர் வியாபாரம்'

-



கொட்டும் மழை
சொட்டுநீர் பாசனம் நடக்கிறது
'ஓட்டை குடிசையில்'

-



என் சரிதையில்
சில பக்கம்


-



காயாத கவலைகள்,
காலையில் காட்டிக்கொடுக்கும்.
தடையத்துடன் தலையணை ஈரம் !

-



தினம்
விடிந்ததும்
உதட்டுக்கு
ஒத்தடம்

'தேனீர் கோப்பை'

-



முகிலின்
சில்லறை
முத்தங்கள்
' தூறல் '

-



கொக்குக்கு
தெரியாத வலி
கொத்தப்பட்ட மீனின் துடிப்பு !

-



வானம் நீயென
வானவில் அவரென

நிலவு நீயென
நீள் இருள் அவரென

கானம் நீயென
கலையிசை அவரென

காண்பவரெல்லாம்
கண்ணத்தில் கைவைத்து
கூறிடல் வேண்டும்...!

ஒளிக்கதிர் வந்துங்கள்
இரு உரு தீண்டினும் - நிலம்
ஒரு நிழலாய் கண்டிடல் வேண்டும்...!

எந்நிலை நேரினும்
உன்னவரிடத்தில்
தன்நிலை மறந்து,
தன்னலம் துறந்து
மென் தன்மையமைந்து
வாழ்ந்திடல் நன்று !

-



கவலைகளை
கருத்தடை செய்,
கண் நோக்கும்
காட்சிகளை கடனாய் பெறு,
ரசனையை ரட்சிக்க பழகு,

விழி தாண்டி விரிவடையும்
கற்பனை காட்டாறாகும் !

-


Fetching சக்கரவர்த்தி தீபன் Quotes