chitra nandhalala  
70 Followers · 30 Following

Joined 30 September 2018


Joined 30 September 2018
8 MAR 2021 AT 9:47



பெண் என்பவள்
ஊனும் உயிரும் கலந்த காவியம்
உணர்வுகளற்ற ஓவியம்

சந்ததிகள் சுமக்க
மலடாகிப் போனாள்
பாரம் சுமந்தே பழுதாகிப் போனாள்

கட்டிலுக்கும் தொட்டிலுக்கும்
சமையல் கட்டுக்குமாக
கடந்த அவளின் காலங்கள்
இப்பொழுதுதான் சிறகு விரித்து
சிந்திக்க துடிக்கிறது

அதற்குள் அவளை
போகப் பொருளாக்கும் காமக்கூட்டம்
காற்றை போல் எல்லா இடங்களிலும்
அவளை கடந்தே...... கடக்கிறது

வலி தாங்கி வந்தவள்
மீண்டும் வலி தாங்கியே
வலி தாங்கவே........
தன் பயணத்தை தொடர்கிறாள்........
புயலான
பூவின் பயணம்தான்
வெறும் புழுதிகளால்
இனி .........
............. நிற்காது........

சித்ரா நந்தலாலாவின்
மகளிர் தின வாழ்த்துக்கள்......



-


25 SEP 2020 AT 17:34

இறைவனின் அதிசய ராகம்
நின்று விட்டது

-


19 JUN 2020 AT 20:25

தொடாதே !தொடரி இனி தொடராதே !
கொன்று குவிக்கும் கொரோனா
உன்னை வென்று எடுக்கும்
காலம் ஓர் நாள் வாராதோ !
கண்இமைக்குள் முட்கள் மாறாதோ !
நோயை தந்து மடிய சொல்லி
வெடியாய் சிதறுகிறாய்.......
உயிரை கொன்று உலகை வெல்ல
இருப்பிடம் மாறுகிறாய்.......

நொடிக்குள் அடங்கும் உலகம்
உன் பிடிக்குள் மயங்காது !
நாளைய உலகம் இன்றே வரும்
உன்னை வென்றே வரும் !
நேற்றைய நினைவுகளோடு
நீ அழிந்து போ அஃ றி னை யே !
வரலாறு உனக்கு வாசல் திறக்காது !
வந்த வழி சென்று விடு வைரஸே !
நீ சென்ற வழி சுவடுகளை
சேகரித்து எரித்திடுவோம் !
சித்ரா நந்தலாலா

-


18 JUN 2020 AT 10:32

காதல் தபாலில் (தாபத்தில் )
பார்வை முகவரிகளை
பரிமாறி கொண்டது இதயம்
ஏக்கத்தோடு i
கொரோனா வைரஸ்
வாழ்க்கையோடு.......

-


23 OCT 2019 AT 9:12


மூடிய மேகத்திற்குள்
மலையும் தெரியவில்லை
விடாமல் பெய்யும் மழைக்கு
வானம் தெரியவில்லை
விழுவது முகிலா மழையா
குளிர் உறையவில்லை
அடர் மழையே அடி மழையே
மரங்கள் ஊறும் அளவு
மலைகள் தேயும் அளவு
புயல் வாங்கிய மழையே
பூமியை பிழிந்து விட்டுப்போ
கடன் வாங்கிய விவசாயின்
கண்ணீர் மட்டம் குறையவில்லை
உன் நீர் மட்டம் உயர்ந்து விட்டதென்று
உமையாக போய்விடாதே
தூர் வாராத குளங்களும்
ஊர் வாராத குப்பைகளும்
நிரப்பியே நிலைத்து விட்டோம்
கடமை மறந்த எங்களுக்கு இன்னும்
கடமையாற்ற வா மழையே


-


17 OCT 2019 AT 22:53

உன்னை விட்டு பிரிந்து போனால் என்ன செய்வாய்
காற்றில்லாத இடத்தில்
கலைந்து போவேன்
ஒளியில்லாத இடத்தில்
தொலைந்து போவேன்
பகல் வராத இரவுகளில்
பயணம் செய்து
நினைவில்லாமல் நெடுநாள் சாவேன்

-


17 OCT 2019 AT 18:23

வாகன வியர்வை

மழைக்குள் ஓடி
களைத்த வாகனம்
உடலெங்கும் நீர்த்துளிகள்

-


26 SEP 2019 AT 20:27

ஓங்கு தனித்தமிழே
ஆதி மூலமாய் அணையாத ஜோதியாய்
நெஞ்சுக்குள் விழுந்து கிடக்கும்
நெருப்பு தமிழே !
மிஞ்சிய மொழி என்று பேசிப்பேசி
இன்று உலகையே விஞ்சிய
மொழி ஆனது காண்பீரோ !
உலகில் உள்ள எல்லா தமிழர்களுக்கும்
தமிழ் தெரியும்
ஆனால் தமிழுக்கு உலகம் தெரியாது
உலகம் அறியாத உன் தமிழை தமிழா
உயர்த்தி உயர்த்தி உயர்த்திப்பிடி
அறிவியலையும் பொருளாதாரத்தையும்
உலக வரலாற்றையும்
நவீனத்துவத்த்தையும்
உன் தமிழுக்குள் கட்டிப்போடு !
பழையன களைத்து
புதியன நுழைத்து
உருக்கிஉருக்கிஉன் தமிழை வார்த்துஎடு !
அது உயர உயரசெல்லும்கற்றுக் கொடு
வெறும் மொழிபற்று தமிழை
தடம் தெரியாமல் செய்துவிடும்
நடைமுறைக்கு கொண்டு
வா முத்தமிழை அது
நம் கையில் உள்ளது சொற்ச்சுவையாக
தொடரட்டும் தமிழின் தேடல்கள்
பொழியட்டும் தமிழ்
மும்மாரியாக உலகெங்கும்

-


25 SEP 2019 AT 22:19

தமிழின் நாடி சொல்கிறது கீழடி
இன்னும் ஏன் தமிழுக்கு நெருக்கடி? தோண்ட தோண்ட வரலாறு புதிதாகிறது
தமிழ் தன் பெருமையை புதிதாக்குகிறது
ஆதி தமிழா !
அடக்குவார் அடங்கும் காளைக்கே
உரிமைப்போர் உலகளவு புரிந்தாய்
உலகறிந்த உன் பெருமை போதுமென்று உறங்கிவிடாதே
இது விழித்து கொள்ளும் நேரம்
உன்னை களவாடிக்கொள்ள
உலகம் காத்திருக்கிறது
உனக்கானதை மறைத்து வைக்க
இருளில் இடம் தேடுகிறது
ஆதி தமிழனே மூத்த மொழி மகனே
கீழடி அகழாய்வு
அலைபேசிபடம்காட்டி கதை சொல்லி
உன்அடுத்ததலைமுறைக்கு இப்போதே
ஆதி தமிழை அடுக்கிவை
புரட்டி புரட்டிதமிழ்மரபைஅள்ளி கொடு
சுழட்டி சுழட்டி தமிழை சொல்லி கொடு
தொடரும் ஆய்வுகளால்தான் நம்
வரலாற்றின் தொடாத பக்கங்களில்
வெளிச்சம் பரவும்
காளைமாட்டுக்காக கொதித்தெழுந்த
என் இனமே மண் மனமே
மலடாகாமல் உன் தமிழ் மரபை காப்பாற்று
மறந்து போனாயானால்
சினந்து போகும் தமிழ்......
சிதைந்து போகும் உன் வரலாறு.....

-


15 SEP 2019 AT 21:13

எனக்கென்று ஒரு அடையாளம்

கற்கண்டாய் கல்வெட்டாய்
சொல் கொண்டு கவிபாட
எனை கண்டு புவி ஆட
வாழ்க்கையே கவி என்று
வாழ்நாளெல்லாம் நான் பாட
கவிஞர் என்ற அடையாளம்
காலத்திற்கும் என்னிடத்தில்......

-


Fetching chitra nandhalala Quotes