உறவான உறவு
உள்ளம் கவர்ந்த வரவு,
அன்புக்கு அன்பு ஆகி,
வாழ்நாளில் தாங்கும் பண்பு ஆகி, பாசத்தால் மகிழ்கிறேன்,
உடன்னிருந்து அன்பில் நழைகிறேன்...!
எழுத்து. செல்ல கிருஷ்ணா
— % &-
நேற்று வரை வந்தது வரவு தான்!
இன்று வரை வருவது செலவு தான்!
நாளை வரை மிஞ்சுவது மீதி தான்...... (Asset )! வாழ்வில் வருவது வரட்டும்!
போகுவது போகட்டும்...!
மனம் கொண்ட நிம்மதியே , வாழ் நாள் சொத்தாகும்...!
எழுத்து. செல்ல கிருஷ்ணா — % &-
பொன் வானம் சிவந்து வர
பூ மேனி மலர்ந்து மகிழ
தென்றலின் ஆசைகள் தேடி வந்த இன்பங்கள் உணர்வுக்கு உயிர்ராய்
உறவுக்கு மலர்ராய்
வாழ்ந்து மகிழனும்
வாழ்க்கையே மகிழ்ச்சியடையனும்...!
எழுத்து. செல்ல கிருஷ்ணா — % &-
தானமும் தர்மமும், தவத்தால் ஒழிந்த கர்மமும்,
இங்ஞானமும் கல்வியும் நயத்தல் பேரு பெற்று, நோயற்ற வாழ்வும் குறைவுஅற்ற செல்வமும்
இம்மையில் பேரு பெற்றால், மறுமையும் மகிழ்ச்சி அளிக்குமே...!
எழுத்து. செல்ல கிருஷ்ணா — % &-
பூப் போல் புன்னகை!
பொங்கி வரும் தேன் இசை!
மஞ்சள் முகம் கண்டு!
மலர் முகம் மலர்ந்து, கொஞ்சி தவழும் ஆசைகள், கோடான கோடி இன்பங்கள்...!
எழுத்து. செல்ல கிருஷ்ணா-
மனம் போல் வாழ்வு
மகிழ்ச்சியின் இயல்பு!
குழந்தை மனம் கொண்டு
செயல் யாவும் புரிந்து,
குற்றம், அற்ற நெஞ்சம்
மனம் அமைதி தரும் கோவிலாகும்...!
எழுத்து. செல்ல கிருஷ்ணா
-
இந்தியா நாடு , நம் நாடு இளமை பொங்கும் பொன் நாடு , கங்கை , காவேரி வளம் கண்ட , வாழ்வில் மக்கள் நலம் கண்ட , விஞ்ஞானம் வென்ற திரு நாடு, ஆன்மீகம் போற்றும் பொன்நாடு, காந்தி மகான் கண்ட திருநாடு , காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, பட்டொளி வீசட்டும் பாரதமெங்கும், பண்பாடு பரவட்டும் உலகமெங்கும்....!
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்..
எழுத்து. செல்ல கிருஷ்ணா-
ஓடி , ஓடி உழைத்தாலும்
உண்மையாய் வாழ்ந்தாலும், மனிதனுக்கு
காசு ஆசை தீராது, அது கடைசி வரை ஓயாது, உனக்கும் கீழ் கோடி பேர்!
உணர்ந்து பார்த்தால் மீதி பேர்!
உள்ளத்தின் வெகுமதி, மனம் நிறைவு அடைவதே நிம்மதி...!
எழுத்து. செல்ல கிருஷ்ணா
-
பூவோடு நார் சேர,
புனித மனம் கரை சேர,
தேரை இழுத்தால் போதுமே, தெய்வம் கூட வந்து சேருமே! அன்பான
நட்பும் அலைகழித்தால்
தப்புதானே,
பாசமான நட்பும் பழகிபார்த்தல் புளிப்புதானே,
உறவோடு உறவு சேர,
உள்மனதில் அன்பு சேர,
அளவோடு இருந்து பார்,
மன மகிழ்ச்சி நம்மை சேரும்...!
எழுத்து. செல்ல கிருஷ்ணா-
ஓடி, ஓடி உழைத்து பார்!
உண்மையாய் உறவை நினைத்து பார்!வாழ்வின் காலம் அறிந்து பார்! வாழ்க்கையில் மகிழ்ச்சி எதுவென புரிந்து பார்! வழிப்போக்கு உறவு வாழ்நாள் முழுவதும் வந்து விடுமா!தென்றல்
காற்றும், தெம்மாங்கு பாட்டும், மனதால் மகிழ்ச்சியே, அது காண தெருவில் நின்று ஆடி திரிந்தால் பிறர் காண்பது இகழ்ச்சியே!
மனிதனுக்கு
மானம் என்பது வாழ்வாகும், புரிந்து கொண்டு நடந்தால் உயர்வாகும்...!
எழுத்து. செல்ல கிருஷ்ணா — % &-