அவள் முகம் பதிந்து இருக்க..
நினைத்து பார்க்கையில்,
கண்ணீர் ததும்புதே அருவியாக!-
Passionate Poet🎙️ Amature Writer✒️ Bookworm 📚
Chaivinist ☕Bazin... read more
அவை அனைத்திலும் நீ
நீக்கமற நிறைந்திருக்கிறாய்,
எனது பேனா மையாக!-
வைரம் போல
ஜொலித்திடும் நிலவை,
கண் கொட்டாமல்
பார்த்து ரசித்தேன்,
இரவு முடியும் வரை.-
என்றால்,
உனக்கேற்ற உரமாய்
நான் இரு(ர)ந்திடவே,
எனக்குள் ஓர் ஆசை
பிறக்கிறதே!!-
கொட்டி தீர்த்த கனமழை போல,
ஒப்ப நனைந்து போனேனே நான்!
"உன் காதலில்"!!-
முதல் வரியாய் நீ இருந்திட
முடிவில் நாம் இணைந்திட
என் மனம் விரும்புதே, அன்பே!!-
இடைவிடாத பொங்கி வரும் அலை போல
பெருகுதே என் காதல்,
அவளை என் அருகே வந்த போது.
இடைவிடாத சொற்பொழிவு போல
துடித்ததே என் இதயம்,
அவள் பார்வை என் மேல் பட்ட போது.
இடைவிடாத பெய்த மழை போல
நனைந்ததே என் மனம்,
அவள் புன்னகையை நான் ரசித்த போது.
இடைவிடாத அழுதிடும் குழந்தை போல
சிணுங்குதே என் உள்ளம்,
அவள் தொலைவில் மறைந்த போது.-
நேற்று போல வானம் இன்று இல்லை..
உற்று பார்க்கையில் நிலவு அங்கு இல்லை..
மேகம், ஒளித்து வைத்து விட்டதா?
நிலவு, பாதை மறந்து விட்டதா?
என சந்தேகக் கடலில் நான் மூழ்கிவிட்டேன்.
வானத்திடம் வினவினேன்,
பதில் ஏதும் இல்லை..
மேகதிடம் வினவினேன்,
பதில் ஏதும் இல்லை..
காற்றிடம் வினவினேன்,
பதில் ஏதும் இல்லை..
நட்சத்திரங்களிடம் வினவினேன்,
பதில் ஏதும் இல்லை..
உனக்காக நான் காத்திருந்தேன்..
இரவு முழுவதும் விழித்திருந்தேன்..
நீ எங்கே போனாயோ?
என்னை விட்டு எங்கே போனாயோ?
நாளை நீ வந்தால்,
என்னோடு பேசாதே!
உன் பேச்சு கா!!-
In this mean world,
have a desire to live a meaningful life.-