மரங்களெல்லாம் விண்ணோடு
தன்னை கோர்த்து கொள்கிறது
தனிமையை தீர்த்துக்கொள்ள-
❤பேனாக்கள் ஏங்குகிறது😍
❤கைவிரல் தொடாதா என்று..............🤍
❤7 ஆம் வக... read more
பெரிய பேராண்மையென்று
பெருமை கொண்டுள்ளார்கள்..!
சரி என்று ஒதுக்கிவிட்டு
ஆகவேண்டிய பணிகள்
ஆயிரம் இருக்கிறது
அதைப் பார்ப்போம்..!😊💯-
ஆயிரம் புன்னகைப்பூக்கள்
பூத்தாலும், இந்த புன்னகை
எதற்காக என்று
புரியாமல் சிரிப்பதும்
சிலநேரம் பழக்கமாகிவிட்டது
இன்றைய நாட்களில்..!🙃🤍-
நீ இல்லா
இந்த ஒரு வாரத்தில்
சுவற்றில் அடிக்கப்பட்ட
சாணி வறட்டிப் போல்
சற்றும் ஈரம் எல்லாம்
மெல்ல காய
என்னை எடுத்து எரித்துவிட்டார்கள்
யாரோ இறந்துவிட்டனர் என்று
ஏனோ நீ இன்று இல்லாததால்
பிறரது வாழ்வுக்குள்
நான் இரையாகிறேன்..!
ஏனோ சொல்லி முடிக்கப்படாத
கதையாக..!-
கடிகாரத்தின் முட்கள்
ஓடிக்கொண்டே இருக்கிறது
மிகவும் வேகமாக
நானோ நின்ற இடத்திலேயே
நிற்கின்றேன்
ஏனோ நகர மனமில்லாமல்..!-
ஆயிரம் உன்னை
நீ மற்றவர்களிடம்
புரிய வைக்க முயற்சித்தாலும்
அது பெரிதும் தோல்வியிலே
முடிவது ஏனோ
நீ சொல்வதை பிறர்
உன் உணர்வாக பாராமல்
அதை அப்படியாயென்ற
கதையாகவே பார்க்கின்றனர்
அவரவர் சூழ்நிலையில் இருந்தால்
மட்டுமே அதன் வலி தெரியும்..!-
ஆத்மார்த்தமான காதல் எல்லாம்
நிர்வாணப் படுத்தப்பட்டு
நீதி கேட்டு நிற்கிறது
இந்த நியாயம் இல்லா உலகில்
எது உண்மை எது பொய்மை
முகமூடிகள் அணியும் உலகில்
முகத்தை கிழித்துக்கொண்டு
இல்லை இல்லை,நான்
உண்மையானவள்/உண்மையானவன்
என்றுரைத்தாலும்
யார் உன்னை, உன்னைப் போலவே
நினைக்க இருக்கின்றனர்
சிந்தைக்கொள்
உனையே நிந்தித்துக்
கொள்ளாதே
பறந்து செல்
பாதை தெரியும் தூரம் வரை
வாழ்வு தொடரும் நாட்கள் வரை
-
எவ்வளவு கோவங்கள்
எவ்வளவு கவலைகள்
எவ்வளவு ஆனந்தம்
எவ்வளவு அலுப்புத்தனம்
அதனைக்கும் முற்றுப்புள்ளி
வைத்துவிடும்
ஒரு கோப்பை காபி
அதன் அதன் போக்கில்..!
-
சிறுப்பிள்ளையாய் மனம்
சில நேரம் சிட்டாய்
பறக்கிறது
சட்டென தொப்பென்று
விழுந்து அழுகிறது
மீண்டும் மலர்கிறது
மௌனம் கொள்கிறது
ஏக்கம் கொள்கிறது
மனம் ஏதோ நினைத்து
எத்தனிப்பு கொள்கிறது
எவை எவை கொண்டாலும்
அவை அவை அடுத்து
அடங்கிவிடும்
இதுவே இயல்பு..!
-