ஒரு நோயாளிக்கு தேவை நல்ல மருத்துவம்....
அறிவுரை அல்ல...
பள்ளத்தில் வீழ்ந்த ஒருவனை மேலே தூக்க முயற்சி செய்தால் அது நல்ல செயல்....
பார்த்து கவனமாக சென்றிருந்தால் பள்ளத்தில் விழாமல் தடுத்து இருக்கலாம் என்ற அறிவுரை இங்கே எந்த வினையும் செய்யாது......
-
குண்டூசி குத்தினால் கத்தி கூப்பாடு போடுவோரெல்லாம்....
என் கணக்கில்லலா காயங்களை பார்த்து எல்லாம் சரியாகிவிடும் என்று அறிவுரை சொல்லுவது சிறந்த நகைச்சுவை .....-
உன்னை அவமானப்படுத்தும் போதும்....
அசிங்கப்படுத்தும்
போதும்....
அலைகளின் நடுவே மிதக்கும் படகாய் நிற்காதே
பாறையாய் நில்....
-
வெற்றிக்கு காரணம் சொல்லக்கூடாது....
தோல்விக்கு காரணம்
சொல்ல நாம் இருக்க கூடாது.......
மேதகு.வே.பிரபாகரன்-
வான் போற்றும் சிறப்பெதுவோ
கல்வியே முதன்மையாகும்...
அந்த பணியை செய்யும் ஆசிரியர்கள் அனைவரும் நூறாண்டு வாழ்க....
எல்லோருக்கும் சமமாய் கல்வியை போதிக்கும் உள்ளமாய் .....
உன்னத பணியை செய்யும் நமது ஆசிரியர்கள் வாழ்க.....
வகுப்பில் கற்றல் திறனை வளர்க்க பெரும் சிரமம் எடுக்கும் எங்கள் ஆசான் வாழ்க......
தனித்திறனை கண்டறிந்து
ஊக்கப்படுத்தும் அரும்மருந்து எங்கள் ஆசான் வாழ்க....
ஆசிரியர்கள் பெருமையை இந்த நாளில் சொல்லுவதில் மகிழ்கிறேன்......
எனது உளம்கணிந்த ஆசிரியர்கள் தின நல் வாழ்த்துக்கள்........-
ஈடில்லா அறப்பணியாம்
ஆசிரியப் பணி.....
இளைஞர்களின் எதிர்காலத்தை
உருவாக்கும் அரும்பணி....
தன் குடும்பத்தை விட நம்மிடமே அதிகம் செலவிடும் உயர்ந்த உள்ளங்கள் ........
ஒவ்வொரு மாணவர்களின் நலனில் அக்கறை காட்டும் ஆற்றல் மிக்க சான்றோர்கள்.....
எங்கள் உயிரில் கலந்த ஆசிரிய பெருமக்களுக்கு இந்த நாளில் நாங்கள் தலைவணங்குகிறோம்.....
தாயைப்போலவும் தந்தையை போலவும் எங்களை வழிநடத்தும்
ஆசிரியபெருமக்களுக்கும்ம் எனது இனிய ஆசிரிய தின வாழ்த்துக்கள்
-
நிராயுதபாணியாக நிற்கும்
என்னை .......
சுற்றி தாக்கும் அம்புகளுக்கு மதிப்பு இல்லை......
-
நிகழ்காலத்தை தொலைத்து.....
எதிர்காலத்தை
இழந்து.....
வாழ்வது கொடுமையிலும்
கொடுமை.....-
பதினோரு வருடமாய் பாழ்பட்டு கிடக்கிறோம்
பகுதி நேர வேலையால் நிம்மதி இழந்தோம்
பாதிப்பை உணர்ந்தோர் படையெடுத்து வா..
பட்டினி கிடக்கும் சொந்தங்களே பட்டினி இருப்போம் வா..
அரசின் அலட்சியத்தை வெளிச்சம் காட்ட வா....
வள்ளுவர் கோட்டத்தின் வீரியத்தை காட்டிலும் சாரை சாரையாய் வா...
புரட்சி என்பது வெடித்து கிளம்பும்
உன் மனக்குமுரலை வெளிப்படுத்த வா...-