கதர் ஆடையை அணிந்து கர்மவீரராய்
கல்விக்கண் திறந்துவைத்தாய்!
தமிழன தலைவராய்
தலைமையேற்று தமிழகத்தை
தரணியெங்கும் தலைநிமிர வைத்தாய்!
எளிமைக்கு இலக்கணம் தந்தாய்!
ஏழைக்கு கல்வி தந்தாய்!
அரசியல் ஆசான் நீ
அரசியல் ஆதாயம் இல்லாமல்
அரும்தொண்டு செய்தாய்!
தனக்கென வாழாமல்
ஊருக்காக உழைத்தாய்!
ஏழையின் பசியை போக்க
மதிய உணவுத்திட்டம் தந்தாய்!
விவசாயியின் கண்ணீரைப்போக்க
விடியலாய் நீர்பாசனத் திட்டம் தந்தாய்!
நாட்டின் பிரதமரை உருவாக்கும்
நற்கதி கொண்டாய்!
மக்கள் நலனே உன் கொள்கை
மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
நீவிர் ஒருவரே!
-
இழந்த சுதந்தரத்தை
இன்னுயிர் தந்து மீட்டெடுத்தோம்
கடமை தவறிய அரசியல்வாதியை
களையெடுத்து மீட்டுருவாக்கம் செய்வோம்-
உண்மையான காதல்
பல நேரங்களில்
தோற்றுவிடுகிறது
பொய்யான காதல்
சில நேரங்களில்
வென்றுவிடுகிறது-
பிரிவும் இழப்பும் ஒன்றே
விலங்காயினும் மனிதராயினும்
வழிந்தோடும் கண்ணீரால் மட்டுமே
ஆறுதல் தேட முடிகிறது-
இருப்பவனுக்கு ஆயிரம் சவால்கள்
இல்லாதவனுக்கு அன்பு மட்டுமே ஆதாரம்
அன்பை பெறுவது மட்டுமே
மனிதனின் உச்சபட்ச நிலை-
எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்கள்
முதன் முறையாய் பள்ளி இலக்கிய மன்ற விழாவில்
எட்டாம் வகுப்பில் கணிதத்தில் முதல் மதிப்பெண் பெற்றமைக்கு பரிசுத் தொகை வாங்க
காரணமாக இருந்த அருணாசலம் ஐயா
பிரியமாய் எல்லோராலும் அண்ணா
என்ற அழைக்கப்படும் செல்வராஜ் ஆசிரியர்
நான் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை விதைத்த புள்ளியல் உலகநாதன் ஐயா
நாட்டு நடப்புகளை பொருளியல் மூலம் விளக்கிய
துரைசாமி ஐயா
விளையாடுவதற்கு ஊக்குவித்த
விளையாட்டு ஆசிரியர் சுப்பரமணியம்
- பு.சு. செல்வா
-
அனைத்து ஆசிரிய தோழர்களுக்கும்
இனிய ஆசிரியர் தின
நல்வாழ்த்துக்கள்-