வேர்த்து வடியும் முகங்களை காட்டிலும்
கலர் கலராக
வேடமிடுபவர்களையே
உலகிற்கு பிடிக்கிறது...!!!-
வாழ்க்கை...
அதில்
ஒவ்வொருவரும்
ஒரு
கீறலிட்டு
செல்கையில்
மனம்
மேலெழும்பி
வர
பயப்படுகிறது....!!!
-
அடடா!!
இந்த உலகில்
எத்தனை அற்புதமான
நடிகர்கள்...
எதுவும் நடக்காதது போல்
மறைத்து சிரித்து
வாழும் அற்பங்கள்...
தொடரட்டும் அரங்கேற்றம்
இவ்வுலகில்...-
வார்த்தைகள் அனைத்தும்
தேனீக்கள் போல
ரீங்காரம் செய்கிறது...
நடுவுல கொஞ்சம்
பக்கம் காணமல்
போகாத என்று
இதயம் ஏங்குகிறது..-
நினைக்கும் பொழுது எல்லாம்
சிரித்த முகம் கண்ணீர் ஓடையாக
பரிணாமம் அடைந்து விட்டது...
பெயருக்கு சிரித்து வைப்போம் என
உதடுகள் முனுமுனுத்துக் கொள்கிறது...-
ஏதோ ஒரு விதத்தில்
இந்த உலகம் உயிருடன்
உலாவ வைக்கிறது...
கிறுக்கல்கள் இப்பொழுது
குறைந்துவிட்டது...
ஆசைகள் அடங்கிவிட்டது...-
புரியாத புதிராகவே
இன்று வரை....
யோசித்தாலும் பதில் இல்லை
கேட்டாலும் பதில் கிடைக்கப் போவதில்லை...
கடவுளிடம் முறையிட்டும்
பதிலில் தாமதம்...
யாரிடமும் சொல்லாமல்
மனம் வெகு நாட்களாக
பாரத்துடனே தவழ்கிறது...-
கண்மூடித்தனமாக ஒருவரை நம்பி ஏமாந்தத்திற்கான பரிசு தான்
அவள் தினம் சிந்தும் கண்ணீர்....-
திரும்ப அவளி(னி)டமே
செல்ல வேண்டும்
காதலை ஏற்றுக் கொள்
என கேட்க அல்ல..
எப்படி மறந்தாள்(ன்)
எனக் கற்றுக்கொள்ள...!!!
-
Everyone says February is the month of Love...
My question is what about the remaining 11 months...
Is it months of breakups?-