தேனீக்கல் கண்டு மயங்கும் ரோஜா அவள்;
என் வாழ்கையில் வர்ணங்களை பூசியவள் அவள்;
எனக்குள் எழும் கோபமெனும் வெள்ளத்தை அடக்கி ஆள தெரிந்த அணை அவள்;
சோகத்தில் இருந்தால் என்னை சிரிக்க வைப்பவள்;
என்னை என்றும் சோகத்தில் ஆழ்த்த நினைக்காதவள்;
காதல் என்னும் கடலில் நீந்தும் மகிழ்ச்சியை கொடுத்தவள்;
அத்தகையவள் இன்று பிறக்க என்ன தவம் செய்தேனோ என்று இந்நாள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது
இந்நாளோடு சேர்ந்து நானும் கொண்டாடுகிறேன்;
என்னவள் பிறந்த நாளையும்;
என்னவளையும்...
என்னவளுக்காக என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்-
Ennangalai eluthaaki antha eluthinai pirar manathil pathiya vaikka m... read more
கனவில் கண்டவனே
கனவனாக வரும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்குமோ தெரியவில்லை
பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும் போல
நான் பாக்கியவதியா என்று-
விழுந்துவிட்டேன்;
அவள் கன்ன குழியில்,
குடி இருக்கலாம் என்று
முடிவு செய்துவிட்டேன்
எழுந்து வர
மனம் இல்லாமல்-
பள்ளி காலத்தில் படித்த பாடங்களை மறந்து இருக்கலாம்,
ஆனால் அடித்த அரட்டையும்
செய்த சேட்டையும் ஒருபோதும் மறந்தது இல்லை.
படிக்கும்போது பள்ளி கல்லூரியை வெறுத்து இருந்தாலும்,
முடிந்தபின் மறுமுறை அங்கு செல்லமாட்டோமா என்று ஏங்காத நாட்களே இல்லை.
உண்மையிலேயே அது ஒரு அழகிய கனா காலம் தான்...-
பிறர் மனதை தப்பித் தவறியும் கூட புண்படுத்தி விடக்கூடாது என்று நாம் நினைக்கும் தருணத்தில் அங்கு காயப்பட்டு கலங்கி நிற்பது நம் மனமே!
-
தலை சிறந்த காதல் கதைகள் அனைத்தும் சேராத கதைகள் தான் அவ்வரிசையில்
நீயும் நானும்...-
ஒரு நாளைக்கு
மனிதர்களுக்கு 60000 எண்ணங்கள்
வந்து போகுமாம்
ஆனால்
என்னுடைய எண்ணங்கள் மட்டும் ஏனோ
உன்னை சுட்றியே இருக்கிறது-