வேண்டும் வேண்டாம் என்று
பிடித்தம் பொறுத்தது இல்லை
எதுசரி சரியல்ல என்பதே
இங்கு வகுக்கப்பட்ட விதி
கிடைக்காது என்று அறிந்தும்
தொலைந்து போன பிறகும்
ஏனோ அதனை விடாது
திரும்பத் திரும்ப தேடுகிறோம்
இருப்பதை எல்லாம் விட்டு
இல்லாத ஒன்றை எண்ணி
நமக்கு நாமே தண்டனை
கொடுத்துக் கொள்வது வேதனை
வரும் போதும் ஒன்றும் இல்லை
போகும் போதும் ஒன்றும் இல்லை
இடையில் எதுவும் உண்மை இல்லை
ஒன்று இருந்தால் மற்றொன்று இல்லை.
- பூமா பாலன்-
எல்லாம் இருந்தும் ஏதும் இல்லா
உத்தரவாதம் அற்ற இந்த வாழ்வில்
பேரன்பு என்ற பெருவரம் கொண்டு
பேறு அடைவதில் பேரின்பம் உண்டு
காயம் யாவும் மறைந்து போகும்
கவலை எல்லாம் பறந்து போகும்
அதற்கு அன்பு ஒன்றே போதும்
மற்றது அனைத்தும் கடந்து போகும்
அதீத அன்பு அழித்தாலும் போகாது
அணுவளவு சலிப்பும் அறவே வாராது
போகிற போக்கில் போய் விடாது
போகாது இருக்கும் போதுமானதும் இருக்கும்
கரையைக் கடந்து கடலில் நீந்தி
கடலைக் கடந்து மலைகள் ஏறி
மலைமேல் நடந்து மரமென உயர்ந்து
நகர்ந்து நிறைந்து படர்ந்து வளர்வாய்
இதுவல்ல வாழ்க்கை இனிமேல் தானிருக்கிறது
உனக்கான வாழ்க்கை உனக்கென
காத்திருக்கிறது
பயத்தைத் தொலைத்து பயணத்தைத் தொடங்கு
மயக்கம் தெளிந்து மனதிடம்கொள் பன்மடங்கு
முதலும் முடிவும் காலம் அறியும்
முடிவில் முழுதும் நீயும் அறிவாய்
இத்தனை காலம் நினைத்த அனைத்தும்
அப்போது ஒருநாள் உனக்கு உணர்த்தும்.
- பூமா பாலன்
-
உள்ளத்தின் ஆழத்தை
தோண்டிப் பார்த்து
ஊற்றென பெருக்கெடுக்கும்
உணர்வுகளோடு விளையாடிச் சென்று
ஆங்காங்கே ரணமாகிப் போயிருக்கும்
நினைவுகளை வருடி விட்டு
எத்தனையோ இரவுகள்
உறங்காமல் விழித்திருக்கும்
தனிமைக்குத் துணையாய்
தாலாட்டு பாடி
இசையாய் இயற்கையாய்
இளைப்பாறலாய் - தன்னையே
மறக்கச் செய்து
இதமாய் கச்சிதமாய் -
நொறுங்கிச் சிதறிக் கிடக்கும்
துருவேறிப் போன
உயிரின் உதிரிகளோடு
தன்னைத் தானே பொருத்தி
அழகு பார்க்கிறது - கவிதை.
- பூமா பாலன்-
If it is not meant to be,
then why did it have to
even happen in the first place?
-
எத்தனை எத்தனை போராட்டம்
நிச்சயம் அத்தனையும் சரியாகும்
நல்லதே தந்திடும் எதிர்காலம்
இல்லையே என்கின்ற குறைபோகும்
எண்ணியது அனைத்தும் ஈடேறும்
வண்ணமாய் வாழ்வு உருமாறும்.
- பூமா பாலன்-
Those that need to be revealed
Remain inside hidden and unnoticed
Unable to be out of the trap
As time passes by
Ignored and forgotten they become
Not knowing what to do
They disappear, atlast.
-
Either we do anything
or we lose everything
for nothing but something.
-
Happy, when it's about me
Happier, when it's about you
Happiest, when it's about us.
-
இருந்த போது எட்டிப் பார்க்காத மனம்
இறந்த பின்பு எண்ணிப் பார்க்கிறது.
- பூமா பாலன்-