- A.K.Bharath-
அறிவில் மடிந்த மழலை
கணக்கில் இழந்த உறவு
ஓட்டத்தில் மறந்த சிரிப்பு
வேடத்தில் மறைந்த ரசனை...
உயிர்ப்பின் இயல்புகளை உதிர்த்து
வாழ்தல்தான் உயர்வென்றால்.,
யாம் தாழ்ந்து கரைந்தே
வாழ்ந்து போகிறேன்...-
என்னை மீட்டிய கனவுகளுக்கு
ஆசைகள் இசைந்திட
நான் மீட்டிய ஆசைகளுக்கு
புலன்கள் இசைத்திட
புலன் ஊட்டிய இச்சையில்
நித்தம் பாடல்கள் பெருகிட
யாம் தொடுத்த இசையால் சூழ்ந்தே
மெல்ல மயங்கிச்சரிந்தேன் நானே-
இதம் சேர்க்கும்
இதயத்தின் நெருக்கம்
தேடும் நேரத்தில்
அமைந்திடும் ஆதரவாய்
அந்நியமாகியும் ஓர் அந்நியோனமாய்..
அற்புத அத்தியாயம் அது..
-
தேக்கி வைத்த வார்த்தையொன்று..!
மீண்டும் உயரில் பாய்ந்தது இன்று..
அலைந்து திரியும் அணுக்கள் எல்லாம்..
அதிரும் அச்சொல்லில் கலந்து போக..
உனக்கான சேதி யாவும்..
விதையால் அதில் பதிந்தே இருக்க..
நின்னுள் கரையும் நான்..
அந்நொடியில்..
உன் காதினுள் ஓதி அர்த்தங்கள் ஆவேன்..!
-
இவள் இழைத்திடும் இம்சையிலும்
இசைவது இனிமையல்லவா.!
இசைந்திட்ட இயற்கையும்கூட
அசைவதின் சாயல் இவளல்லவா.!
-
இப்பிணைப்பின் இம்சைகள்..
இன்பமெனும் இன்னல்கள்..
முரண்தான் ஆசைகள்..
இத்தனை இடரிலும்
இதம் தந்த இறைமையாய்..
நீ என்னும் ஆறுதல்..!
-
இதே புவியில்..
வெகுதொலைவில்..
அதே அழகிய கிறுக்குதனங்களுடன்..
நடந்தே இருக்கும் உன்தின பொழுதுகள்..
என்றோ உன் செயலில்..
புகும் நம் நினைவில்..
வெளிப்படும் உன் கவிபுன்னகைபோதும்..
கடந்தே கரையும் என்தன் பொழுதுகள்..
-
கிடைக்கும் சுவடுகளை
தொடர்ந்து வந்தால்.!
அவளின் வாசனையே கமழ்ந்திருக்கும்..-
மிகைபடுத்தும் காதல் வரிகள்தான்..
உவமையுடன் உறவாடும் கவித்துகள்தான்..
கற்பனையை குழைத்த மனதின் வண்ணம்தான்..
இத்தனை இன்பமும் வெறுமைதானே..
உரிய பெண்மையை சாராவிடில்..
-