Every patient has a strong violence inside.
-
நீ உண்மையே கூறினாலும் ஒப்புக்கொள்ளாத உலகத்திடம் அவர்கள் கூறும் பொய்களுக்கு தலை அசைத்துவிடு அவர்களுக்கு புரியும் நேரத்தில் புரியும் ! நிரூபிக்க நினைத்து உன்னை நீயே வருத்திக்கொள்ளாதே!
-
நான் வாழ ஒரு வாழ்க்கை...
மற்றவன் பார்வையில் ஒரு வாழ்க்கை!
ஒரு பிறப்புக்கும், ஒரு இறப்புக்கும் இடையே பலவித வேடங்கள்!-
எவரையும் மகிழ்விக்க நினை, திருப்தியடைய அல்ல...
மகிழ்விப்பதில் மகிழ்ச்சி காண்பாய்.
ஆனால், திருப்தியடைய நினைத்தால் திகைத்துப்போய் நிற்பாய் !-
நீ, என் கையை பிடித்து நடந்தபோது உன் கைகளை தட்டிவிட துடித்தேன்!
உன் கையை பிடித்து நடக்கும் காலத்தில் உன் கைகளுக்கு உள்ளே தஞ்சம் புக துடித்தேன்!-
வார்த்தைகள் உள்ள போது அதனை கேட்கும் செவிகள் இருப்பதில்லை !
கேட்கும் செவிகள் ஏராளம் இருக்க, மனதால் வார்த்தைகளை வெளியனுப்ப இயலவில்லை.-
தனிமை மட்டுமே உடனிருக்கும்
நிலையில் தனிமையை
விட்டு விலகுவது எவ்வாறு?-