நான் உன்னை
நினைத்து
தோய்த்து
உலர்த்தி
மடித்து
இஸ்திரி போட்ட
என் இதயத்தை
நீ வந்து வம்பாய்
கலைத்து
விரித்து
கசக்கி
பிழிந்து
பரவச போதை ஊட்டி
மறைகிறாய்
மறுபடியும் மண்ணாய்
உருமாறும் மனதை
என்னசெய்து மீட்ப்பேன்
என் விதி
உன் வித்தையிடம் சிக்கித் தவிக்க
விமோசனம் தேடி பித்தாய் பறக்கும்-
Astrophile
Orophile
ஆடும் திரையின் பின்னே
நீ வருவாய் என
கண்கள் காத்திருந்து பூத்துப்போயின
இருளில் உன் நிழலும்
இத்திசை சாயாதோ?
இழுப்பில் கிடக்கும் இவ்வுயிரை மேயாதோ?-
உன் மென்வருடல்கள்
என் பிணியை மென்று வென்று விட்டது
உன் மெய் தீண்டலில்
நம் காதல் உயிர்மெய் உருவானது
உன் இதழ் பதிந்ததில்
என் கனவு உயிர்த்தெழுந்து பறந்தது
நம் அன்பு பரிமாற்றத்தில்
ஞாயிறு பூமியில் முளைத்தது-
பனிக்கால வெளுப்பில்
ஞாயிறு கதிர்
பாதங்களை வருட
உன் மார்பு சூட்டில்
இதமாய் கதகதப்பாய்
அணைக்கும் தழுவல் போதும்
பிறப்பின் ஏக்கங்கள்
தீர்க்கும் போதை நீயே-
உன்னை மறக்க
கவிதை எழுத ஆரம்பித்தேன்...
இப்போது கவிதை எழுதும்போதெல்லாம்
உன்னை நினைக்கிறேன்!-
நீ
என் கவிதை ஊற்றின்
வற்றாத ஆதாரம்
உன் தீண்டல்
ஒற்றைக் கைப்பிடி மண்ணை
தூர்வார்த்து
சுரக்க சுரக்க
திகட்டாத தேனமுதை
வடியச் செய்கிறது-
சருமம் கொழுந்துவிட்டு எரிந்ததில்
இருவரும் பனிக்கட்டிகளாய் உரைந்தோம்
இடைச்சறருகலாய் சிணுங்கலும் சங்கீதமாய் மாற
உறங்குகிறது நம் காதல் குழந்தை-
மெருகூட்ட ஓப்பனைக் கேட்டேன் மலர்கள் தந்தீர்
வெக்கை தணிய கேட்டேன் மழையை தந்தீர்
என்னிடம் ஒன்றே ஒன்று கேட்டீர்
பழுதான என் சின்ன இதயம் அது
உம்மிடம் அதை கொடுக்க மனமில்லா பாவி நான்
காலம் தாமதமாக கதியின்றி கலங்கி நிற்கிறேன்
விட்டுவிடாமல் வழிப்படுத்தி விடுதலையோடு வாழ
விண்ணுலக விமோசன வரம் வேண்டுகிறேன்❣️-
Out of my mind
Out of your heart
Like a poisonous ivy thorn - Not so
Unique and rare as a rhino's horn
Stuck in a hole so deep
I'm blemished
I'm famished
Without my saviour's love
Nothing compared can save me true
-