மழையின் மெளனம் கேட்டேன்
அந்த வெண்ணிலவின் நிழலில்,
சற்று விழுந்தும் போனேன்,
அந்த வான்மகளின் சிரிப்பில்!-
உன் வல்லினத்தால் என்னை மெல்லினமாக்கி,
குறுகிய எதுகையில் என்னை உட்கார வைத்தாய்,
சிந்திக்கவும் வைத்தாய், சிரிக்கவும் வைத்தாய்,
இறுதியில் மும்(மோ)னை சிறையில் பிடித்து விட்டாய்,
என் தமிழே!-
பார்வைகள் பல, பறவைகள் பல,
வேடனின் பார்வை பறவையை ருசிக்கும் இலக்கில்,
இந்த மூடனின் பார்வையோ, அந்த பறவையின் களைப்படைந்த சிறகிலே!
-
Time never runs, but we do.
After all, It's all us.
If it's heavy, it's the heart. So,take it patiently.
If you can take it light, it's the mind. So, close it logically.-
வாழ்வது வாழ்க்கையென்றால்,
அதை வாழ்ந்து பார்க்க
ஒரு வாழ்க்கை வேண்டும்.-
எதிர்பாராமல் வரும் மழை போல, சில சமயங்களில் சில தருணங்களை தரும் வாழ்க்கை தான் அவற்றை எதிர்பார்த்து காத்திருக்கும் போது வெப்பத்தை தருகிறது.
-
I wish to get lost in your shadow, where sun never sets and clouds rain petals.
-
நானல்ல நீதான் என் இறைவா,
பிறப்புக்கும் வாழ்க்கைக்குமான பயணத்தில் வழிகாட்டியானாய், உயிருக்கும் உறவுக்கும் ஆன போராட்டத்தில் உற்ற நண்பன் இருந்தாய், ஆனால் இன்று என் கனவுக்கும், நிஜதிர்க்குமான தேர்வில் பகைவனாய் நிற்பதேனோ?
-
Everything happens for a reason,
A reason which mind accepts, but heart doesn't.
-
கற்கவும், கற்பிக்கவும்,
கற்றபின் அப்பிழை வராமல்
நிற்க உதவும்
விலைமதிப்பில்லா தங்கம்.-