கையடக்க கைப்பேசியில் மறைத்த காதலை, உன் கண்பார்த்த நொடியில், கதைத்துவிட்டேன் கண்ணிரோடு...!
-
✍️கவியுலகிற்கு எனை தத்தெடுத்த தமிழன்... read more
சத்தமில்லாமல் தன்னுள்
வைத்திருக்கும் பழைய புத்தகப்புதையலில்...!
பசுமையான பள்ளி நினைவுகளுடன்..!
-
கடிகாரத்தை கையில் கட்டிக்கொண்டு
அனுதினம் அதைப்பார்த்து கொண்டிருந்தும்,
பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்...
நாமே காலத்தின் கையில் உருளும்
பிணையக்கைதியென...!-
கடிகாரத்தை கையில் கட்டிக்கொண்டு
அனுதினம் அதைப்பார்த்து கொண்டிருந்தும்,
பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்...
நாமே காலத்தின் கையில் உருளும்
பிணையக்கைதியென...!-
அன்று எழுதிய நாட்குறிப்புக்கள்...
இன்று எதையோ அவசரமாக தேடிகிற
போது அழகாக அகப்பட்டுவிட்டது...!
நேரம் கிடைக்கும் வார இறுதியில்
தனிமையாக போய்வருவோம் காலப்பயணம்...!-
அன்று எழுதிய நாட்குறிப்புக்கள்...
இன்று எதையோ அவசரமாக தேடிகிற
போது அழகாக அகப்பட்டுவிட்டது...!
நேரம் கிடைக்கும் வார இறுதியில்
தனிமையாக போய்வருவோம் காலப்பயணம்...!-
ஆழமாக உள்ளிழுத்து
மென்மையாக வெளியிடும்
மூச்சுக்காற்று உணர்த்திவிடும்
அதன் சுவாரசியத்தை...!
நீண்டகால தீராக் குழப்பத்திற்கும்,
சாலையோர வழிப்போக்கனைப்போல்,
சாதாரணமாய் ஆறுதல் சொல்லி
ஆசுவாசப்படுத்திவிடுகிறது
சன்னலோர தென்றல் காற்று...!
-
தோழியென அறிமுகமானவள்!
தேன்தமிழாய் தினமும் தித்தித்தவள்!
விடியலிலும், அடைதலிலும்
அமைதியாய் ஐக்கியமானவள்!
நண்பகலிலும் நண்பியாய்,
நலம் விரும்பியாய் தொடர்ந்தவள்!
ஒருநாள் ஒருபொழுதும்
அவளின்றி அணுவும் அசையாவண்ணம்
அதிகாரமாய் ஆர்ப்பரித்து அமர்ந்துவிட்டாள்
உடலின் ஒவ்வொரு செல்லிலும்!
உதிரமாய் ஓடுகிறாள்
ஓசையே இல்லாமல்!-
அறிமுகம் இல்லாத யாரோ ஒருவரின்
அளப்பரிய வாழ்த்துகளுடன் தான் ஆரம்பிக்கிறது
ஆண்டின் முதல்நாள்!
எத்தனைமுறை விழுந்தாலும்
சலிக்காமல் எழுந்துவரும்
மழைலையின் மனம்போல
இம்முறையும் சொல்லுவோம்!
எண்ணிய யாவும் இனிதே ஈடேறும்-
விவரம் தெரியாத வரை
கண்ணில் தென்படும்
சிவப்பு & வெள்ளை மட்டுமே
நிறமென நினைக்கிறது
பால்மனது!
இருளின் பக்கங்கள் ஒளிப்பட்டு
வெளிப்படும்போதே வலிக்கிறது
ஆழ்மனது!-