நீந்தி கடக்க பார்க்கிறேன் - உன் கடல் எனும் கண்களை
மீண்டும் மீண்டும் மூழ்கினேன் இந்த கடலின் அற்புதங்கள் பல காண
பேரலையும் பெயரில்லாமல் போகும் - கண் சிமிட்டிய நொடி பொழுதில்..
மீண்டு வர மணம் இல்லாமல் ஆயுட் கைதியானேன்
சிறையின்றி சிறை பட்டேன் - இச்சிறு கடலினுள்
காந்தமும் கல்லாய் போனது உன் கண்கள் என்னை ஈர்த்த பின்பு....-
காற்றும் இரவும்
தென்றல் கொண்ட இரவை இரசிக்க மணம் இல்லாத பித்தன் யாம் !
இரவினை இரசிப்போர் நடுவில் - சிவப்பு கொடி பிடித்த போராளி யாம்.
இடம் கொண்டு, மணம் கொண்டு இரசிப்பவன் மத்தியில் - யாம் திண்ணை கூட இல்லாத பரதேசியாவோம்..
உணவும், இருப்பும் இல்லாத ஒருவனுக்கு - தென்றலும் தீ பிழம்பாய் தீண்டி செல்லும்.
இடம் தேடி சோர்வுற்ற கண்கள் - காற்றினையும் , இரவினையும் இரசிக்கும் இரசனை புலப்படவில்லை ஏனோ...-
மழை ஒன்று என்னை தீண்ட - மலை மீது நின்று நான் பார்க்க...
தேகம் குளிர்ந்து - சிறு தென்றல் என்னுள் மோத.... இறுகிய இதயமும் ஈரம் கொண்டது !
இரவும்-நிலவும் மடி நீட்டி என்னை அழைக்க...
உயிர் மறந்தும் - தேகம் தொலைத்தும் தென்றலோடு தேடுகிறேன்..
என்னுள் என்னை...!!-
எறும்புகள்
கல் மனதும் இல்லை மலை தேகமும் இல்லை - என்ற போதும் படைகள் பல ஆயிரம்...
திசைக்கு ஒன்று சிதறியதால், - எடைகள் எளிதாகினோம்..
கருவி இல்லை - கொலை நோக்கம் இல்லை என்றபோதும் விரட்ட பட்டோம்...
சாதியும் கண்டதில்லை - சாத்திரமும் கொண்டதில்லை பிரிவுகள் பல இருந்தும்.
எளியவனை எதிரியாக பார்த்தால் - யாம் எதிர் கொள்ள வழி ஏதோ இப்புவியில்..!!-
தலைப்பு ஒன்று தோன்றிய போதும் - பூக்களாக பூப்போம்..
நீர்வீழ்ச்சியாக பாய்ந்திடுவோம் கையில் எழுதுகோல் எடுத்தால்..
மண்ணகமும் மெய் தரும் மை கொண்டு அவளை தீண்டினால்..
உலகம் உய்யும் வரை அணுவென பிளவு கொள்வோம் - கவிதை வரிகளால்.-
பெண் அவள் பார்வையினால் - கைதி ஆகினான்
கட்டவிழ்ந்த காளையனை, கண் சிமிட்டி சாய்த்து விட்டாள்
கள்ளியின் ஓரப் பார்வையால் - காட்டாறும் பனித்துளியாய் மாறியது.
பாவை அவள் கண் அசைத்தாள் - ஜென்மம் ஏழு காத்திருப்பேன் கண்மணியின் கரம் பிடிக்க..-
மனது எல்லாம் உன் நினைவு
விழி எல்லாம் மழை துளிகள்
உன் நினைவலைகளால் திக்கு எட்டும் சிதைந்தது என் மதி..
உன் வரவு வந்து சென்ற பின் - நடை பிணமாக வாழ்கிறேன் இப்புவியில்.
ஜீவனற்ற மேனியால் பயன் ஏதடி பெண்ணே..
நினைவுகள் மேகமாக - கண்ணீர் வெள்ளமாக - இதனிடையே கரைந்ததும் கரையாமல் காத்திருக்கும் உன் காதலன்.-
காரிகை கொண்ட காதலுக்கு விலை இல்லை இப்புவியிலும்....
ஈடு செய்ய இயலாதவன்.. பரிசளித்தான் கண்ணீர் வெள்ளத்தை.!
விரிசல் கண்ட படகை - ஓநாய் கூட்டம் வஞ்சகமாக நோட்டம் விட்டது கரையோரத்தில்...
திணறிய காரிகையோ வெள்ளத்தில் மூழ்கி உயிரதை மயிரென நீக்கினாள்..
காரிகை கொண்ட காதலுக்கு விலை ஏதும் இல்லையடா... இப்புவியிலும்.!!!-
விழி இரண்டு, மூடிய போதும் நினைவுகளாக சுற்றினேன் உந்தன் பின்னே..!
நிசப்தம் நிரம்பிய அறையிலும் செவி இரண்டிலும் ஒலித்தது உன் குரல் ஒலிகள்.
இரு கை கோர்த்து ஓர் பயணம் செய்ய நித்தம் வாடுகிறது இதயம்.
உன் வருகையை எதிர் நோக்கிய கண்களை பூக்கச் செய்வாயா காரிகையே.
தேன் மழை இசையினால் விருந்து ஒன்று தருவாயோ... என் காதல் தேவதையே...-
மனம் என்னும் விநோதம்....
பூஞ்சோலை அதை ரசிக்காமல் பறிக்க துடித்தான்
கண்ணாடிகளை ஆசை தீர உடைத்திட துடித்தான்
மின்னும் தங்கத்தை அடகு வைக்க துடித்தான்
பஞ்சு ஆலையை நெருப்பால் பற்ற வைக்க துடித்தான்
நாயினை சீண்டிட துடித்தான்
மின்சாரம் அதில் விளையாடிட துடித்தான்
துடிப்பு அது அடங்கும் வரை துடித்தான் மனமெனும் எனும் விநோதம்....
விநோத செயல்கள் செய்து... !!
-