அவள் ஒரு சதிகாரி...!
முத்தங்கள் வேண்டும் என்றால்,
என் விழி பார்த்து கேட்டிட மாட்டாள்.
எனை ஏதோ ஒரு குறை சொல்லி
கோபம் ஆக்கி,
சண்டை இழுத்து,
மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்காமல்
தண்டனையாய் சில முத்தங்கள் கொடு என
மறைமுகமாய் கேட்கிறாள்...
அவள் ஒரு சதிகாரி...!-
Writing is both
A Blessing and A Curse.
She loves watching the moon,
He loves watching her.
She loves reading the book,
He loves reading her.
She started loving him,
He started loving her.
It would have been a love story with a happy ending,
If it isn't a story of three.-
அத்தனை வலிகள் இவன் விழியில்
மறைத்தவன் நகைப்பதில் சிறந்தவனோ...?
காயம் தந்தால் சிரித்திடுவான்,
உணர்ச்சிகள் முழுதாய் இழந்தவனோ...?
காதலால் கலந்த மனதினை மாற்றி
துருப்பிடித்த இருதயம் கொண்டவனோ...?
அவன் சோகக் கதைகளை கவிதையில் புதைத்து
வெளியே சிரித்துக் கொல்பவனோ...?
இவனது வாழ்வே விடுகதை போன்றது
விடைகளை யாவையும் மறைத்தவனோ...?
புரியா புதிர் இவன், புரிந்திட நினைத்தால்
மறுகணம் அதனை மறுப்பவனோ...?
உறவுகள் வெறுத்து, உண்மையை மறைத்து
தனிமையை முழுதாய் அணைத்தவனோ...?
நிஜத்தினில் அவனை நெருங்காதிருக்க
இருளில் வாழ்ந்திட நினைத்தவனோ...?
-
நிலவுக்கான பாதையில்,
நான் தொடங்கிய என் பயணங்கள்
அவளது இல்லத்தில் முடிந்தது.
அவளும் நிலவோ...?
அவள் தான் நிலவோ...?
பதில் அறியேன்..!-
அத்தனை வலிகளை விழிகளில் மறைத்து
இத்தனை அழகாய் சிரிக்கின்றாய்...!
இன்றே என்னிடம் கூறிடு நண்பா,
எத்தனை நாட்களாய் நடிக்கின்றாய்...?-
The longer I stay,
The greater the impact I'll make.
The sooner I left,
The bigger the void I'll leave.-