BALA   (BALA)
3 Followers · 4 Following

Joined 16 November 2020


Joined 16 November 2020
9 FEB 2022 AT 12:38

Up on a Parisian rooftop,
With us,Holding the Champagne glasses,
Spellbound by the scintillating sight of the Eiffel,
I saw her large lusturous eyes shining as bright as the moonglade on the sea
And her fingers striving to interlace with mine,
Things couldn't get any better with her by my side !
I was engulfed in an ecstasy of delight
But with one desire left in me,
If only this night would never end...
— % &

-


17 JAN 2022 AT 1:31

Reminiscing the past,

In a vintage bookstore cafe of NYC,
Surrounded by the earthy scent of books just like petrichor,
Embraced by the warmth of the most beautiful Spring morning,
With my soul shimmering like the stellar ones,
And my Coffee brimming with the latte art of hearts,
I met those deep blue eyes
Which stared into my soul,
Seated right infront me
Exploring the unexplored,
It was the moment of epiphany !
Which enabled me to sense the ethereal beauty of existence !

-


12 JAN 2022 AT 16:21

நீ கீழிறங்கி வாராயோ வெண்ணிலாவே என்றேன் !
ஆனால் வான்மதியும்
வீண் எனத் தோன்றியது
அஞ்சனம் தீட்டிய அவள் விழிகளை முதலில் கண்டவுடன் !
ஆர்ப்பரிக்கும் ஆழியாய் நான் அவள் முன் பரந்து விரிந்திருக்க
அவளோ அதனினும் ஆழமான அகக்கடலை அலசிக் கொண்டிருக்க,
அணுவும் அறியா அவள் அறிந்த இரகசியங்களை !
இதழ் திறவாயோ நீ ?
இறுதி வரை இவளின் காதல் யாரெனக் கண்டறியேனோ நான் !

-


25 DEC 2021 AT 14:53

Why love is so fascinating ?
Though I'm aware that you'll not be mine this time,my love
The very thought of you is enchanting!
This is a strange paradox, isn't it ?
If not for this birth,I have six more to wait for you,my girl !
We may cross paths again in the future!
And you may pass like a streak of lightning !
But I'll catch you on a snowy evening,
And shall see eye to eye
Under fully bloomed cherry blossoms in the streets of Seoul,
To begin again,the greatest romantic tale this Universe has ever witnessed !

-


5 NOV 2021 AT 20:20

இமயவனும் இமயவளும் அன்பால் இழைய
இரைச்சல் ஏதும் செய்யாது கானகமும் இசைந்தாட;
இரவனும் மேகக் கடலுக்குள்
தலை கவிழ்த்து ஒளிந்து கொள்ள;
இருள் சூழ்ந்த இளஞ்சூட்டில் இதழ்களும் நகை பூக்க;
இதற்கென காத்திருந்தாற் போல்
விண்ணக மீன்களின் பேரொளி படர;
ஆழி சூழ்ந்த விழிகளுடனே,
ஆர்ப்பரிக்கும் காதலை பரிமாறிக் கொண்டனர் தலைவனும் தலைவியும்!


-


19 JUL 2021 AT 20:27

ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும்
கதை கிளைகள் பல விட்டும்,
அசையாது நிற்கும் அக்கோவில்
அம்பலத்தான் அவனைக் காண
அருள்மொழி எழுப்பிய பெரிய கோவில் !
திருமகள் போல பெருநிலச்செல்வியும் தனக்கே உரிமை பூண்டும்,
அரன் அவனுக்காக அமைத்த அச்சிறு கோவில் கண்டு,
பொன்னியாம் காவிரியும் பொன்னியின் செல்வனைக் கண்டு ஆனந்தத்தில் பொங்க,
அப்பெருவுடையானும் வியக்க
அரசாண்ட அறத்தான் அவனே,
செந்திரு மடந்தை மண் சீராசராசன்!

-


16 JUL 2021 AT 20:58

INTO THE WILDERNESS OF NATURE
IN SEARCH OF HER WILLFUL SOUL,
AN EARTHLY BEING OF TIMES
FRAMED HER HABITAT,
UNDER THE MYSTERIOUS MILKY WAY,
AUTUMN WINDS BLOWING CHILLY AND COLD
AND AURORAS SHIMMERING IN THE SKY,
STARSTRUCK BY THE COSMIC MARVEL;
SHE GAZED AT THE COLOSSAL CONSTELLATIONS , SIPPING HER HOT COCOA
AND THE SPARKLE IN HER EYES...
MY GOD ! EVEN THE STARS ENVIED !

-


19 MAY 2021 AT 19:51

இளவேனில் இரவெங்கும்
விண்மீன் திரளைக் காணவரும் விம்மீனாம் பெண் ஒருத்தியைக் காணாது
வானகமும் மோனமதில் ஆழ்ந்திருக்க,
மங்கை அவளின் வருகைக்காக சேடல் பூத்துக் காத்திருந்த சந்திரனும் காய்ந்து போக,
அதிகாலை அருகில் வர
அரிவை அவள் அறை விட்டு வெளிவர,
அம்புலி அவனது துயர் நீக்க
அழலவன் கொன்றை பூசிய தன் முதல் கீற்றினைத் தெளித்து அவளை வரவேற்க,
மான்விழியாள் அவளைக் கண்டு
மதியும் மதிமயங்கித்தான் போனான் விடைபெற்று !

-


17 FEB 2021 AT 20:22

'ந'ர்த்தனம் ஆடும் நந்தனும் அவனே!
'ம'லைமகளாம் பார்வதியின் மகாதேவனும் அவனே!
'சி'கையில் பிறைச்சந்திரனைத் தரித்த சிவனும் அவனே!
'வா'ன்தீயாய் திருவண்ணாமலையில் தோன்றும்
திகம்பரனும் அவனே!
'ய'ம்மை ஆளும் ஈசனும் அவனே!

அரன் அவனின்றி அமையாது உலகு.
பிரபஞ்சமாம் பரம்பொருளே தாள் பணிந்தோம்!

-


12 FEB 2021 AT 16:02

Deep into the wintry woods
Driven by eternity
Drowning in the hush of darkness
Bitter breathless by the alluring ammil
I'm whispering secrets to the Universe
By dripping dewdrops of your dwindling memories ...

-


Fetching BALA Quotes