Ashok Sindhan Bharathi Karmegam  
59 Followers · 102 Following

Life doesn't Need a Miracle.
Be the One
Joined 26 January 2019


Life doesn't Need a Miracle.
Be the One
Joined 26 January 2019

இளமை தொலைத்து,
இதயம் தேடுகிறேன்.
இதழால் கொஞ்சம்
இசைத்திட்டுப்போ,
இணைவோம் என...
இங்கு தூங்கா என்
இரவுகள் எல்லாம்
இளைப்பாறட்டும்....

-



சுற்றும் இந்த பூமியில்
சுற்றா என் நாட்களெல்லாம்,
சுற்றி சுற்றி தேடுது சுழல்விழி
உனை சுற்றுலா காணவே....

-


20 MAY 2022 AT 13:48

நிலையில்லா நிமிடங்களின்
நிலைபெறும் நித்திரையில்,
நிலவாய் அவள் நினைவுகள்...
நிறுத்தம் தாண்டி நில்லாமல்
நிறைகிறது கண்ணில் கனவுகள்.....

-


12 DEC 2021 AT 18:40

அந்தி சேர்ந்தும் என்னுடன்
ஆறாத சில வலிகள், ஏனோ
வழிகள் சேர்ந்தும் உன்னுடன்
கூறாத என் மொழிகளால்....

-


12 DEC 2021 AT 17:39

நகர்கின்ற மரங்களென என்னுள் நடமாடுகிறது உன் நினைவுகள்,
ஏனோ என் நகர்கின்ற பயணங்கள்
எல்லாம் நெஞ்சொடு.

-



முற்றுப்பெறா என்தன்
முதல் ஆசையென,
முழுதாய் முடிவானாய்
நீ முழுநிலவே.....

-


28 SEP 2021 AT 22:55

காற்றாக என் நெஞ்சம்,
கரை வந்து சேரதோ...
நிலவாக நீ வந்தால்,
உலாக்கள் இனி தீராதே...

-


15 SEP 2021 AT 15:39

நதியென அவள் நின்ற பொழுதுகளில்,
நிலைகொண்டிருந்த பிம்பமே கண்டேன்.
ஏனோ என் கண்கள் அறியவில்லை, உன்னுள்ளம் நிலையில்ல நீரோட்டங்களென...

-


13 SEP 2021 AT 15:28

முகமறிய என் முதல் நிலவே
முதல்முறை உன் முகம் காணவே,
முடிவில்லா என் முழு தேடல்கள்....

-



என் எல்லா கானல் கனவுகளும்
உன் உள்ளங்கையில் உலாபெறவே....

-


Fetching Ashok Sindhan Bharathi Karmegam Quotes