அப்பாவின் அன்பு
சலனமோ சலசலப்போ இல்லா ஆழ்கடல் மய்யம்,
அம்மாவின் அடைமழை அன்பின் முன் அமைதியாகி போனது,,
நான் ஆசைப்பட்ட யாவும் உருவாய் மாற்றமுடியும் உன்னாலின்றி யாரோ,
இதற்காக இரவெல்லாம் பகலானதே உனக்கு,
நம் உறவு காந்தம் போல் விலகி இருந்தால் மட்டுமே ஒட்டிக்கொள்ள ஓடும்,
நெருங்கி வந்தால் வெட்டிகொண்டு ஓடும்,
யாவும் புரிந்தது நான் புலம்பெயர்ந்த பின் நம் அகம் விட்டு,
பிரிவென்பது வலியே ஆனால் இது தான் அன்பை உணர வழி,
ஆயுள் முழுவதும் அக்கறை இக்கறை என ஓடமாய் ஓடியது போதும் இனி நான் ஓடமாகிறேன் நீங்கள் ஓய்வெடுங்கள்.
- நான்✒
16 JUN 2019 AT 9:47