கடைசிமூச்சு
-
Ashok Jegatheeshan
(நான்✒)
130 Followers · 36 Following
-கிறுக்கலின் மேல் கிறுக்கு
-மொழி மேல் பற்று
-தமிழ் மேல் அலாதிபிரியம்
-எழுதுகோல் மீது எண்ணிடலங... read more
-மொழி மேல் பற்று
-தமிழ் மேல் அலாதிபிரியம்
-எழுதுகோல் மீது எண்ணிடலங... read more
Joined 27 April 2019
22 SEP 2023 AT 19:35
தீண்டி தீண்டி செல்லும் அலையும்
உரசி உரசி செல்லும் காற்றும்
உன்னை தவிர யாரைதான்
நியாபகப்படுத்தும் எனக்கு...-
21 SEP 2023 AT 22:29
அவளை சிலையாக
செதுக்க நினைத்தேன்
இப்போது
நான் சிலையாகி போனேன்
அவள் சிரிப்பை கண்டு....-
21 SEP 2023 AT 22:20
காலையில்
கோப்பை தேநீரை
உனக்காக உருவாக்கி
உனக்கான நாளை
என்னிடமிருந்து
ஆரம்பிக்க எனக்கு ஆசை....-
21 SEP 2023 AT 22:16
உன் வாழ்க்கையே
நீ வாழ
உன் விருப்படி விட்டு
உன்னை விரும்புவது...-
21 SEP 2023 AT 22:10
அந்தி என்பது
வானத்துக்கும் சூரியனுக்கும் தானே
பிரிவு
உனக்கும் எனக்கும் இல்லையே
பிறகு ஏன்
பிணக்கு என்னோடு உனக்கு....-
21 SEP 2023 AT 7:31
சமமாக பார்க்கதான்
மனம் ஏங்குகிறது
ஆனால்
வெற்றியில் களிப்பில்
கை கொடுத்தவர்கள் எல்லாம்
தோல்வி கலக்கத்தில்
கை கொடுக்காதது ஏனோ?!-
21 SEP 2023 AT 7:26
உணரவே முடியாத
ஓர் உணர்வு
உன் முதல் தீண்டல்
என் மீதான போது....-