I longed for silence
a sleep beyond breath
where no dreams bloom,
the moment I saw you
clutch the blade
that pierced my heart...
-
canophilist❤
caninetrovert 🐕
musicophile
nyctophile
eleutheromaniac
Just a s... read more
ரோஜா ஒன்றையே நான் கேட்டேன்
ஆனால் நீ கொடுத்தது
மல்லிகை மலரின் கனிந்த பரிமளம் பரவிய தோட்டம்.
என் இதயம் தேடும் அந்த ஒற்றை மணம் இல்லாதபோது
மற்ற எல்லா வாசனைகளும்
ஏனோ பெரும் சுமையாகவே...
-
We always end up forgiving
the ones we love the most
as if love itself demands
zillion second chances.
Yet the heart remembers quietly
the soft ache of scars,
like old wounds that never bleed,
but never heal.
Is forgiveness the breath of love?
Is patience its hidden root?
When forgiveness falters
And when
the heart can no longer bend
does love crumble into dust,
or transform into something unnamed?
-
நான் உன்னை நேசித்தேன்
இந்த வரி ஒரு அர்த்தத்தைத் தருமா?
அன்பு நேற்று என்ற சிறையிலே அடங்குமா?
அன்பின் ஆழம் ஒருநாள் மறைந்து விடுமா?
அது சாத்தியமெனில்,
நதிகள் தம் பாதையை மறந்து,
மீண்டும் பனிமலையைத் தேடுமா?
அலைகள் கடலை மறந்ததுண்டா?
இதயம் தன் துடிப்பை மறுத்ததுண்டா?
நேசத்தின் முன்
காலத்தின் ஓட்டமும் மொழியின் நெறிமுறைகளும்
தோற்று தான் போகிறதோ?-
The weight of my heart bowed me down
I let the quill bear what I could not...-
சொல்லப்பட்ட சொற்களே சாபமெனின்,
சொல்லப்படாதவைகள் இருளின் நிழல்களல்லவா?
நாக்கின் நுனியில் துடித்தும்,
மௌனத்தின் சிறையில் அடைக்கப்பட்டும்,
அவை நஞ்சாய் நெஞ்சைத் துளைக்கின்றன அல்லவா?
அவை கேட்கப்படாத பிரார்த்தனைகளா?
அல்லது எழுதப்படாத கவிதைகளா?
மறக்கப்பட்ட இசையின் உடைந்த ராகங்களா?
அவைகள் நிழலாய் நம்மை பின்தொடர்ந்து,
நித்திய கேள்விகளாக நெஞ்சை துளைக்கின்றன அல்லவா?
சொல்லப்படாத சொற்களின் மொழியாய் கண்ணீர்
இரவுகளின் அமைதியைத் துண்டித்தபடி
சுவாசிக்கும் பிணமாய் கிடக்கும்
நம் கல்லறையின் மேல்
காற்றாய் வந்து நிற்கின்றன அல்லவா?
அப்படியிருக்க,
சொல்லப்படாதவையே
மனிதன் தன்னிடம் சுமந்து செல்லும்
மிகக் கடுமையான சாபமல்லவா?-
What if my days run out before your arms ever hold me?
What if I wander off the map and stars refuse to guide me home?
What if the shadows gnaw at my bones and call me by my fears?
What if I find myself at thresholds that lead nowhere?
I ask for less than forever
Be my companion
Oh my dear desired destination...
-
உணர்வுகளை வெளிப்படுத்த
சொற்களைத் தேடி அலைந்தாலும்,
உன் கைகளைப் பற்றியபடி
கண்களில் மூழ்கும் அந்த நொடி
அங்கே பிறக்கும் அந்த மொழி,
நமக்கே உரியதல்லவா?-
ஒரு கண்களின் ஆழம்
மனிதன் புரியாத சிந்தனையைத் தருவது ஏன்?
அந்த பார்வை
சொற்களைத் தாண்டி பேசுகிறது என்றால்,
மனிதர் மொழி எல்லாம்
ஒரு மாயைதானோ?-
His tongue, her cherished quill
Her skin, his sacred folio
Together they design
Love, their most tender poesy...-