16 DEC 2018 AT 8:52

தமிழின் மற்றும் ஓர் சிறப்பு :-
_______________________________
கவிதை முழுதும் ஓரெழுத்து
சொல்லால் அமைத்த கவிதை :-
இடதுபுறம் கவிதையும்
வலதுபுறம் அதன் விளக்கமும்.

கவிதை விளக்கம்
👇👇👇 👇👇👇
கூ கா பூமி காக்கும்
தூ உ மீ தூய சிவன் மேல்
பூ நீ பா பூவே நீ பாடி
வௌ நே கௌவு நேயத்தை
நொ து தே. துயர் அழிக்கும் தெய்வத்தை.

மை வை மை வைத்த
கா பூ நீ சோலை பூ நீ
மா வீ பேர் அழகே
கோ நோ து தலைவன் வருத்தம் அழிக்கும்
சீ நீ. திருமகள் நீ.

நே நீ தா நேசம் நீ தந்து
தே நோ கா நாயகன் நோவு காக்க
நே பா கூ அன்பு பாடல் கூறி
தே ஐ வை. நாயகனை வியக்க வை.

ஐ வை நீ வியக்க வைத்து நீ
வௌ மா கோ கொள்ளையடி பெரிய தலைவனை
வா பூ வா. வா பூவே வா.

வீ வா நீ பறவையே வா நீ
மீ மே போ ஆகாயம் மேல் சென்று
தூ நே பா தூய அன்பால் பாடல்
கூ து து. கூறி துயர் அழிப்போம்.

- ✍️அருண் குமார் வேலுசாமி.