அந்தி சாயும் நேரம் விரைய
கதிரவன் துயில் கொண்டான் மறைந்திருந்து
தென்றல் மெல்ல தாலாட்டிடவே
மறுமலர்ச்சி தென்பட்டது வான மேடையில்
மரங்களோடு மனம் சேர்ந்து ஆலிங்கனம் செய்தது இரவு-
இளவெயில் காலையில்
வெளிச்சம் படராத இடத்தினில் நடப்பது போன்று தோன்றிடும்
அன்பிற்கு அனுதாபமின்றி கடந்திடும் வாழ்வதனில்
-
drifting apart does feel unreal.
it's like remembering the time and place when I met you,
but forgetting what I really felt then, no matter how hard I try.
-
yes, I do falter looking into your eyes when you watch me this close
yet, a day can't pass by without me seeing you, a sucker for your gaze, I'm toast-
என்னவள் எய்தும் ஓரப்பார்வையை
அவள் அறியாமல் நான் ரசித்ததில்
திரைச்சீலை வழியே தீண்டியது புது நாணம்
-
மீதமிருந்த அடிச்சோற்றைக் களைந்தெறியும் அலட்சியத்தில், உரிமையிழந்து போனது
கிடைக்காதவர் வயிற்றின் பசிப்பிணி-
அவன் மீது எனக்கான காதலை
மூன்றாவது மனிதனாக கண்டிட நேர்ந்தான்
ஒருதலைக் காதலின் நிலையற்ற திரைச்சீலையில்-
காற்றுக்கும் வேலி போட நேர்ந்தது
வயிற்றுக்கு தடையிடாத வரை
பலூனில் அடங்கிப்போனது வாழ்க்கை-
பறந்திட இனியேதும் வையகம் ஏதேனக்கு
உயிரினை விழுங்கிடும் மானுடர் கைப்பிடியில்
காட்சிப்பிழையாகி போனதே இயற்கையின் நியதியே-