5 நிமிடம் அமைதியாய் இருந்து
அவள் கொடுக்காத பதில்...
தீர்க்கமாய் என்னில் வந்து
கொடுத்தது பதில்..."மௌனமாய்"
"கூடுமானால் அடுத்த ஜென்மத்தில்"-
Not from the mouth.......
நீண்ட நாளுக்கு பிறகு
அழைபேசியில் ஒரு குறுஞ்செய்தி
"விரைவில் recharge செய்யுங்கள்"-
Platonic relationship
பெரு முள்ளின் பெரும் நகர்வில்
சிறுமுள்ளின் நகர்வொன்றில்
சிறு முள்ளை தீண்டாத
பெரு முள்ளின் பயணத்தில்
ஒரு நிமிட பொழுதை தான்
சிறு முள்ளும் கழிக்காதோ?
நின்று விட்ட (கடிகாரம்)இப்பயணம்
மீண்டும் தான் தொடங்காதோ?
நொடி முள்ளின் காதருகே
பெரு முள்ளின் வேண்டுதல்கள்
-
"மேகமோ அவள்"
என் உயிரை இதமாய்
பருகும் "மேகம்"
கவிதை எனும் மழையாய்
பொழிகிறது என் மேல்
-
Every failures gives two choices
1. Just You stay down
2. You'll just get up on-
யாவரும்
இங்கு கற்றுக்கொண்டிருப்பவர்கள் தான்.
கற்றவர் என்று எவரும் இல்லை
-
காதல் செய்வது எப்படி?
இங்கு நான் சொல்லும் காதல் அனைவரும் நினைப்பது போல அல்ல.
அது ஒரு முக்தி நிலை. யாருக்கும் யார் மீது வேண்டுமானாலும், எது மீது வேண்டுமானாலும் இந்த காதல் என்பது தோன்ற கூடியது. ஆனால் சில குறிப்பிட்ட தேவைகளுக்காக இந்த காதலை செய்யும் சிலர் அதில் ஏமாற்றமும் அடைகின்றனர். ஆனால் காதல் என்பது அப்பாடியல்லாமல் ஒருவரை அல்லது ஏதேனும் ஒன்ரை ரசிக்கும் நிலையை குறிப்பிடுகிறது. எப்படி, ஒரு குழந்தையை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அது செய்யும் சின்ன சின்ன சேட்டைகளை ரசிப்பது போல. அது அந்த குழந்தை மீது ஒரு பெரிய காதலை ஏற்படுத்தும். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் ஏற்படுத்தாது. அது போல எது செய்தாலும் அதில் உள்ளதை ரசிக்க தொடங்கினால், அவர்கள் செய்யும் தவறிலும் கூட அவர்களுக்காக செய்யும் நியாயங்கள் தான் முதலில் நமக்கு தெரியும். அது அவர்களை புரிந்து கொள்ள நம்மை அழைத்துச் செல்லும். காதல் செய்யும் யாரும் எதுவும் ஒரே சிந்தனையை உடையவர்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி அவர்கள் புதிராய் இருப்பதும் அவர்களுக்குள் இருக்கும் அன்பை இழுத்து பிடிக்கும். அதுமட்டுமல்லாமல் காதல் என்பது பிணைப்பை ஏற்படுத்த அல்ல. அது ஒரு சுதந்திரத்தை ஏற்படுத்தும். ஒரு அழகான உலகை இரு மனங்களுக்கு ஏற்படுத்த கூடியது. மன அமைதியை ஏற்படுத்த கூடியது.
ஒரு சிறந்த மனப்பக்குவத்தை ஏற்படுத்தும்.
-