வழிப்போக்கன் சுவரொட்டியை பார்த்தது போல
நீ என்னை பார்த்திருக்க கூடும்..
அதனால் தான் என்னவோ என்னை நினைவுகூற உன்னால் முடியாது போனது..
ஆனால் நான் ஒரு தேனீர் இடைவேளையில் பாதி முடிவதற்கு முன் பலமுறை உன்னை நினைத்து கொள்கிறேன்..
நாம் காதலித்த நாட்கள் என்று எனக்கு எதுவும் இல்லை..
இருந்தபோதும் உன்னை சந்தித்த நாட்கள் எதையும் மறக்கவில்லை..
போகட்டும்...
யார் உன்னை காயப் படுத்தினாலும் கவலை படாதே..
உனக்கு சாய்ந்து கொள்ள என் தோள் இருக்கிறது..
எனக்கு இந்த சுவர்களை போல..
-
வழிப்போக்கன் சுவரொட்டியை பார்த்தது போல
நீ என்னை பார்த்திருக்க கூடும்..
அதனால் தான் என்னவோ என்னை நினைவுகூற உன்னால் முடியாது போனது..
ஆனால் நான் ஒரு தேனீர் இடைவேளையில் பாதி முடிவதற்கு முன் பலமுறை உன்னை நினைத்து கொள்கிறேன்..
நாம் காதலித்த நாட்கள் என்று எனக்கு எதுவும் இல்லை..
இருந்தபோதும் உன்னை சந்தித்த நாட்கள் எதையும் மறக்கவில்லை..
போகட்டும்...
யார் உன்னை காயப் படுத்தினாலும் கவலை படாதே..
உனக்கு சாய்ந்து கொள்ள என் தோள் இருக்கிறது..
எனக்கு இந்த சுவர்களை போல..
-
என்றைக்கோ
நீண்ட வரிசையில்
நமக்கு முன் நிற்ப்பவரில்
உள்ளுக்குள் சின்னஞ்சிறு
பொறாமை இருந்ததென்றல்
நாம் அத்தனை
நேர்மையானவரோ அவ்வளவு நல்லவரோ
ஒன்றும் கிடையாது..
பிறருக்காக எடுத்த முடிவுகளுக்கு
வருந்திக் கொள்ள..
உனக்கு சரியானதென
எதை நம்புகிறாயோ
அதையே செய்!
அது தவறெனும் போது
திருத்திக் கொள்ளலாம்..
இந்த பிறப்பே
தவறுகளால்
பிணைக்கப்பட்டது தானே!-
சில நேரங்களில்
தப்பான முடிவுகள்
எடுக்கலாம் தப்பில்லை..
காரணம்
நீ அவ்வளவு புத்திசாலி
ஒன்றும் கிடையாது..
எல்லாவற்றிலும் சரியானதை
தேர்ந்தெடுக்க..
உனக்கு திருத்திக் கொள்ள
இன்றளவும்
வாய்ப்பு உள்ளபோது
ஒரு நாள் முட்டாள்தனம்
செய்ததில் தவறொன்றுமில்லை-
இத்தனை
போராட்டங்களுக்கு
நடுவிலும்
ஒரு நொடி உன்னால்
சிரிக்க முடிந்தது
என்றால்
வாழ்க்கை அத்தனை
கொடியதல்ல!
தூரல் இட்டுக்கொண்டு
செல்லும் மேகம் போல்
சிலநேரங்களில்
இழைப்பாறு,
நம்பிக்கை வை,
அழுது கண்ணீர் விடு,
சிரித்து மகிழ்,
பூமி உன்னை
மீண்டும் மீண்டும்
புதுப்பித்துக் கொள்ளும்...-
எல்லாமும் எல்லாருக்கும்
இனியாவது சமமாகட்டும்!
எல்லா துன்பங்களும் இன்றோடு
விட்டு விலகட்டும்!
மீண்டும் புதிய 365 நாள்கள்!
வாழ்வோம் நமக்காக மண்ணில்
வீழ்ந்து மடியும்வரை🥂
இப்படிக்கு உங்கள் வருடம் 2024🌺🌺
-
கொஞ்சமாவது என்மீது அன்பிருந்திருந்தால்
இத்தனை நாட்களில் ஒருமுறையாவது
என்னோடு பேசியிருப்பாய்..
நானாக தேடிவந்த போதெல்லாம்
கடமைக்காக பேசியதற்க்கும்
என் நன்றிகள்..
மீண்டும் மீண்டும் இதயத்தில் எங்கோ
ஒரு மூலையில்
உன்னோடு பேசிக்கொள்ள ஆசைத்தொற்றிக் கொள்ளும்..
ஆனால் என்ன செய்ய சில நேரங்களில்
சுயமரியாதை என்னை தடுத்து கொள்கிறது..
ஆமாம்!, அன்பில் சுயமரியாதைக்கு இடமில்லை தான்..
ஏனோ! என்னில் இருந்து விலகி இருக்க
காரணங்கள் இருக்கும்
உன்னை நெருடலாக்கி
என்னை காயப்படுத்த
மனம் ஏற்க்கவில்லை..
எங்காவது உன்னை சந்திக்க நேர்ந்தால்!
நான் பேசாமல் போனால்
மன்னித்துவிடு!
உன்னை காயப்படுத்த அல்ல..
எனக்கும் காரணங்கள் உண்டு..-
இந்த இரவும்
என் இதயமும்
ஏன் இரக்கமற்றிருக்கிறது..
நிலவும் இந்த
கடற்கரையும் இல்லாதிருந்தால்
எப்படி இரவுகளை
கடத்தியிருப்பேன்..
எதிர்பார்ப்பின்றி அன்பு காட்ட
தெருநாய்கள் கூட
இல்லாத நாட்டில்
எப்படி நாட்க்களை கடத்துகிறேன்
இதுவரை புரியவில்லை..-
உன்னை தொல்லை செய்யாத..
உனக்காக எதுவுமே செய்யாத..
உன்னை காதல் மட்டுமே செய்த என்னை..
கடைசியாக சந்திக்க வருவாயானால்..
விலைமதிப்பற்ற உன் இருதுளி கண்ணீர்
எனக்காக சிந்துவாயானால்..
என் இறப்பினும் இன்பம் வேறில்லை..
என் பெயரிடப்பட்ட கவிதைகள்
இங்கு இல்லாமல் இருக்கலாம்..
ஆனால்
என் எல்லா கவிதைகளும்
உன்னை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும்..
வீழ்ந்து கிடக்கும் வெட்டுக்கிளி
சிற்றெறும்புகளால் சிதைக்கப்படுவது போல்..
என் ஆன்மாவையும் உன்
நினைவுகள் சிதைத்து கொண்டிருக்கும்...-
இதுவரை நான் பழகியதில்
நல்லவரோ கெட்டவரோ
எவருமில்லை..
எல்லோரும் சந்தர்ப்பவாதிகள்
நான் உட்பட..
மனதில் விருப்பத்திற்கும் வெறுப்பிற்கும் நூலிழை
வித்தியாசம் தான்..
இரண்டையும் முடிவு செய்வது
நாம் தேர்ந்தெடுக்கும் காரணங்கள் தான்..
மற்றவர்களை பற்றி எப்போதும்
முடிவு செய்யாதீர்கள்..
புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்..
எல்லோருக்குமான சூழ்நிலைகள்
எங்குமே ஒன்றல்லாத போது
ஒருவரை போல்
ஒருவர் வாழ்வதே இல்லை..
பிறக்கப்பட்ட எல்லா உயிருக்கும்
அதற்க்கான வாழ்க்கை உண்டு..
தனக்கான வாழ்வை தேடிக்கொள்ளாத
எவரும் இறப்பிலும் முழுமை பெறாதவர்களே..
தன்னை நேசித்து பிறரோடும் நேசம்
பாராட்டுதல் போல் வாழ்வின் இன்பம் வேறில்லை..-