Arun Karthick   (Arun Karthick)
7 Followers · 5 Following

Joined 25 May 2019


Joined 25 May 2019
4 NOV 2023 AT 0:04

அவளை பார்த்தே பல மாதங்கள் ஆகி விட்டிருந்தது. பேருந்திலிருந்து இறங்கியவளை கண்ட சந்தோசத்தில் அவனுக்கு கண்ணீரே வந்தது.

பற பற வேன பறந்த அவன் கரங்களை பார்த்தபடி அவளை இருக கட்டி அணைத்தால் வலிக்குமோ என எண்ணி யோசித்தவனுக்கு, மாற்றாய் அவளே ஓடோடி வந்து இருக கட்டி அணைத்து கொண்டாள்.

உலகமே மெதுவாக சுற்றுவதை போல உணர்ந்தான்.
பார்க்காத நேரத்தில் திருட்டு தனமாய் அவளை பார்த்து ரசிக்கவும் வைத்தாள்.

அவள் கோவித்து கொள்ளும் அழகே அத்தனை அலாதி. கோவதிலும், அழகாய் வேறு இருந்து தொலைப்பாள்.

இது காதலா என்பதெல்லாம் அவன் ஆராய்ந்திருக்கவில்லை ஆனால் அவளிடம் மட்டுமே மனம் ரசித்து லயித்து போகும்.

-


26 OCT 2023 AT 20:38

அவளை நேரில் பார்க்க எண்ணி நூற்றுக்கும் மேற்பட்ட வழிமுறைகளை செய்தேன்.

நாளும் வந்தது, எதிரே அவள் புன்னகைத்து கொண்டு வரவே, வெட்கம் பிய்த்து கொள்ள, ஓடி ஒளியவே எண்ணினேன்...

காட்டி குடுக்கும் கண்களை மறைக்க, அந்த இரவில் அவசரமாய் அவன் கருப்பு கண்ணாடியை அணிய,
இது என்னடா வென அவள் குலுங்கிச் சிரித்தாள்.

அவளிடம் பேச எண்ணி யோசித்த வைத்த கதைகள் இருந்தும், சாமானியமாய் ஏனோ இவ் விதழ்கள் பேச மறுக்கிறது.

பேசினாள், சிரித்தாள், மிரட்டினாள், பார்த்தேன், ரசித்தேன், மீண்டும் என்னை தொலைத்தேன்.

இதோ அவள் துள்ளி குதித்து கிளம்பி போயே விட்டாள். இருந்தும் அவளது குரலின் ரீங்காரம் அவனை சுற்றியே.

-


26 OCT 2023 AT 20:30

அவளை நேரில் பார்க்க எண்ணி நூற்றுக்கும் மேற்பட்ட வழிமுறைகளை செய்தேன்.

நாளும் வந்தது, எதிரே அவள் புன்னகைத்து கொண்டு வரவே, வெட்கம் பிய்த்து கொள்ள, ஓடி ஒளியவே எண்ணினேன்...

காட்டி குடுக்கும் கண்களை மறைக்க, அந்த இரவில் அவசரமாய் அவன் கருப்பு கண்ணாடியை அணிய,
இது என்னடா வென அவள் குலுங்கிச் சிரித்தாள்.

அவளிடம் பேச எண்ணி யோசித்த வைத்த கதைகள் இருந்தும், சாமானியமாய் ஏனோ இவ் விதழ்கள் பேச மறுக்கிறது.

பேசினாள், சிரித்தாள், மிரட்டினாள், பார்த்தேன், ரசித்தேன், மீண்டும் என்னை தொலைத்தேன்.

இதோ அவள் துள்ளி குதித்து கிளம்பி போயே விட்டாள். இருந்தும் அவளது குரலின் ரீங்காரம் அவனை சுற்றியே.

-


22 OCT 2023 AT 10:05

Of course I'm in love with you ,
You make me feel emotionally safe,

I feel that, you can actually hear my thoughts.
You are the only one who didn't misunderstand me.

When I realized it, i didn't acknowledge it at first.
Coz I'm scared of losing you.

I'm fighting between the state of
being your friend and your secret admirer.

I might not be a good match for you, but
I wanted to love you at your own terms.

I want us to be inseparable.
Is it possible?
Will you end this suffering, my lady.

-


15 OCT 2023 AT 23:12

மௌன புன்னகையுடன் தலை அசைத்தபடி அவனும்,
கோடி சங்கதிகளை ஒற்றை நிமிடத்தில் பாவித்து
காண்பிக்கும் அவளும்.

கை கோர்த்து, நகையாடி செல்லமாய் அவளிடம்
ஓர் இரு குத்துகளும் வாங்கியபடி அவர்கள் உலா வர,

நீ மத்தவங்க மாதிரி இல்ல டா என்று அப்பாவியாய்
சொன்னவளுக்கு தெரியவில்லை,

பெருகி வழியும் காதல் வெள்ளத்தை மறைக்க
அவன் அரும்பாடுபட்டு கொண்டிருக்கிறான் என்று.

சிறகடித்து பறக்கும் அவள் விழிகளில் சிக்குண்டு
தொலைந்து போன ஆடவர் எண்ணிக்கை ஆயிரமாம்.

அவளது குறும்பு சேட்டைகளை காண ரசிகர் மன்றமே உள்ளதாம்.

காதலை சொல்லி செருப்படி வாங்கியவர்கள் நூற்றுகணக்காம்.
துல்லியமாய் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அவனோ அவளது சிநேகிதன் மட்டுமே...
கோதையின் மனம் யாருக்கோ...!

-


8 SEP 2023 AT 4:29

பொறாமையெல்லாம் இல்லை ஆனால்
லைட் அஹ பொறாமை தான். ஜோடியாய் couple's goals
பண்ணும் காதலர்களை பார்த்து.

மனிதர்கள், பறவைகள், ஏன் எறும்புகளை பார்த்து கூட
பெரு மூச்சு விடுகிறேன். ஏனோ உள்ளுக்குள் ஒரு ஏக்கம்.

எங்கே இருக்கிறாய், எனது சரி பாதியே,
என்னை வந்து சேர, ஏன் இவ்வளவு காலம் கொள்கிறாய்.
எனது காதல் விண்ணப்பம்,
உன்னை வந்து சேரவில்லையா, சகி.

இல்லாமல் இங்கு போவாய், ஒரு தருணம் எனக்காக
நீ நிச்சயமாக வருவாய்

Bachelor ஆகவே இருந்து விடலாமா என யோசித்தாலும்,
சில கனம் சமூக வலை தளங்களில் அலைபாய்ந்து
திசை மாறும் கண்களுக்கும் கடிவாளம் இட்டு,
அடக்கி கொண்டாலும். என் நெஞ்சம் எல்லாம்
உன்னை எதிர் நோக்கியே காத்திருக்கும் என்னவளே.

தாமதம் செய்யாமல் சிக்கிரம் என்னோடு
சேர்ந்து விடு, எனது அருமை வருங்காலமே.

இப்படிக்கு, உன் இதயம்.

-


5 SEP 2023 AT 14:09

கலங்காதே என் ரத்தமே,
உன்னுடைய நிதர்சனமான பாசத்தை அவர்கள் உணரவில்லை,

உன்னை உனது தனித்துவத்திற்காக அவர்கள் ஏற்றுகொள்ளவில்லை.

நீ அவர்களுக்கு முக்கியத்துவம் குடுத்தது போல்
அவர்கள் உன்னை பார்க்கவில்லை.

நீ அவர்களை நேசித்தது போல அவர்கள்
உன்மேல் நிஜமான அன்பு காட்டவில்லை.

இது எதுவும் உன் தவறு இல்லையடா. நீ மீண்டு வருவாய்.

நீ பனி பாறை இல்லை தம்பி, நீ அக்கினி பிழம்பு.
அதை நீ உணர்வாய்.

உனக்குள் இருக்கும் ஒவ்வொரு குழந்தை தனமும் அழகியல்.

உனது போராட்டமும் வேதனையும் யாம் அறிவோம்.

உடைந்து போகும் நேரம் இதுவல்ல என் தங்கமே.
தைரியத்தை திரட்டி கொள்.

வரும் காலம் சிக்கிரம் உனது ஆகும். நீ நன்றாக வாழ்வாய் ரிஸ்வான்.

-


20 MAY 2023 AT 1:55

நினைவுக்கு தெரிந்த நாள் முதல், உள்ளுணர்வு தோன்றி நமக்கு தெரிந்தவர்களுக்கு எதோ பிரச்சினை என ஓரளவுக்கு கணிக்க முடியும், அதும் சில நேரம் கனவாக ஏதாது வந்தால் நடந்தே தீரும். பல முறை ஆச்சரியபட்டு இருக்கிறேன். நல்ல விஷயங்களும் அரிதாக நடக்கும். சிலரிடம் இந்த அனுபவத்தை சொல்லி கேலிக்கும் ஆளாக்க பட்டென்.

ஆனால் என் அம்மாவும் என் தோழி ஒருவளும் தான் இதை நம்பினார்கள். (Before transition when i was with my birth family) ஒவ்வொரு முறை என் அம்மா விடம் இந்த கனவு எனக்கு வந்தது, நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்றால் அவர் பயந்து கொள்வார். இது நான் மாறி (after transition), குடும்பத்தை பிரிந்து வாழுகிற பொழுது, இந்த கனவு வரும்போது நான் தவித்து நொந்து போனது உண்டு.

(Swipe next to read - 2/4) ->

-


29 APR 2023 AT 14:24

பிரகாசமான ஒளியாக
நீ இருந்தாலும்,
உன் வான்வெளியில்
மையம் கொள்ளும்
நட்சத்திர கூட்டமாக
என்றும் நான் இருப்பேன்,
என் மேக தேவியே...

🫶

-


26 APR 2023 AT 23:28

வெண்ணிலவு என்னும் நண்பன்....

ஆயிரம் கதைகளை உன்னிடம் பேசி இருப்பேன்...

இப்பொழுது உன்னைப் பார்க்கையில் ஒரு புன்னகை மட்டுமே உதிர்க்க தோன்றுகிறது...

தலைவி மேல் மையல் கொண்டு இரவெல்லாம் உறங்க மறுக்கும் இமைகளிடன் என்ன நான் சொல்வேன்...!

அவள் கருணை கொள்ள, அந்த நட்சத்திரங்களை
சற்று தூதிடு தோழா.

மேக தேவியை தேடாத நொடியில்லை, சிறிது தரிசனம் தர மாட்டாளா என நீயே கேட்டுச் சொல்...?

ஆண்டாண்டு காலமாய் இதே காதலோடு அவளின் இணையாக வாழ வேண்டி எனது விண்ணப்பத்தையும் கொடுத்திடு...😁

நற்செய்திகாக கள்ளன் காத்திருப்பான்,
என மொழிந்து விடு, சகா...

-


Fetching Arun Karthick Quotes