கண்கள் காண்பது கனவில்லை
கற்பனை ஏதும் வரவில்லை
காலம் இதுபோல் இருந்திடவே
காட்சி இனிமை ஆகிறதே...-
CSE
Zoho
Taken
Trichy-21
Eternal Reality
Boredom Writer✍️
Both English and Tamil
Sri Ramakrishn... read more
கனவே மெல்ல நெருங்கிடுவாயோ
கவலை இன்றி உறங்கிடுவாயோ
இடர்கள் நித்தம் இடைவருமோ என
இயல்பை மறந்து விழித்திடுவாயோ...-
சுவர் மீது விழுந்த நிழல் போல
உனை நெருங்கி இருத்தல் எனதுஆசை
ஒளி இன்றி பிறந்த உவமையென
ஒளிவின்றி இருத்தல் எனதுஆசை...-
முதல் எதுவென கண்டதில்லை
முடிவு அதை எண்ணிக் கொண்டதில்லை
மதி என உந்தன் முகம் கண்டு
மடி தூக்கம் போதும் அன்பே...-
ஓசையற்ற இரவுகளிலே
ஓராயிரம் கனவுகள்
செவிகள் கொஞ்சம் உறங்கிடவே
சேதி மறந்த தரவுகள்...-
கண்கள் மூடி கனவிடவே
கண்டேன் உன்னை கரை எனவே
எந்தன் காதல் உனை நெருங்க
மீண்டும் அலைகள் இழுத்திடவே...-
மரம் உதிர்த்த இலையாக
மனம் மாறுதே
மலர் உன்னை ரசித்துக் கொண்டே
மடிந்து போகுதே...-
காற்றை வரவேற்க கதவு திறந்து
காதல் வருமோ என காத்திருந்தேன்
காதல் வரவில்லை
காற்றும் வரவில்லை
காலம் கழிந்ததே
நெஞ்சம் கனமாக
நெற்றி மேலே சிறு
முத்து வழிந்ததே...-
நேற்றை போலே இன்றும் உண்டே
மாற்றம் ஏதும் இல்லையே
காற்றும் ஒன்றே காயம் ஒன்றே
இன்றும் ஆறவில்லையே-