நிழல் ஆசைகள் ஆர்ப்பரிக்கும்,
மனதின் மாயை தோள் கொடுக்கும்,
தயங்கி நின்றால், என்றும்
தீரா ஆசைகளாகிவிடும்!
துணிந்து செய்துவிட்டால்
புதுவித மகிழ்ச்சி வரும்
சாதித்த பெருமை சேரும்!-
aravish
(Aravish (அரவிஷ்))
935 Followers · 52 Following
Please subscribe my youtube channel. Url given below.
https://instagram.com/aravish17
Order ... read more
https://instagram.com/aravish17
Order ... read more
Joined 3 June 2020
YESTERDAY AT 9:00
1 JUL AT 23:02
நிலவு இல்லாத நாளில்
நீ மிளிர்கிறாய் எந்தன்
நட்சத்திரமாக,
உன் ஒளியிலே நானும்
சற்றே பிரகாசிக்கிறேன்!-
1 JUL AT 9:54
பார்வைதாசன் நானடி!
விழிகளில் விழுங்கி
மனதினில் வளர்த்து
காதல் தூது விடுகிறேன்,
நாளும் உனை தொடர்கிறேன்!
-
30 JUN AT 9:16
தெளிவு வேண்டும்,
நமை சுற்றி நடக்கும் யாவற்றிலும்
நம் கவனம் வேண்டும்,
பொய் கூறும் மனிதர்களை
பிறர் அறிய அடையாளம் காட்ட வேண்டும்!
நமக்கென்ன என கடந்து போகாமல்
கேள்வி கேட்கும் துணிவு வேண்டும்!
-
29 JUN AT 9:43
காலையின் கிரணங்கள்
உடலை ஊசியாய் குத்த,
விடுமுறை எண்ணம்
சோம்பல் வளர்க்க,
எத்தனை சோதனை
ஞாயிறு வந்தாலே
-
29 JUN AT 7:25
உன்னை இரசித்திடவே நானும்
என்னை ஏச்சு பேசிடவே நீயும்
காதல் விண்ணப்பம் தொடரும்
நீ என்னை ஏற்கும் வரை!-
27 JUN AT 8:57
உனக்கான பாதையை
உருவாக்கும் பொறுப்பு
உனதாக இருக்கட்டும்,
வெற்றியோ தோல்வியோ
கவலை கொள்ளாதே
முயற்சியே முக்கியம்!-