பூட்டிய மனதின் புதையல்கள்
இரவின் இன்தென்றல் போல
இதயத்திற்கு இதமாக
இன்றைய தனிமையில்
இனிமையிடம் இரவல் ஈட்டி
இன்னிசையாக இசைந்திடுதே!!!-
Discover and decipher...
The rusty bench of my favourite spot
Coated with yesterday's pain
Started to bloom gracefully
When I sat with a hand full of today's peace!!!-
தோல்வியின் தலை
நினைவுகளில் நகைப்போடு
எட்டிப்பார்க்க !!!
வெற்றியின் விரல் கூட
நுழையக் கூச்சம்கொள்வதேனோ!!!-
A soothing breeze combs her hair ,
Like a gentle lover's unspoken care,
As she sprinkles soft rose petals in air,
Her kind lover's bliss could only be fair,
As the waving love dissolves their lair,
All they wish is to be a bonded pair.
-
விடைபெறத் தெரியாமல்
காத்திருக்கிறேன்
விண்மீன் கைகோர்த்து
விடியலின் விளிம்பில்
விழியோரம் ஈரம் பூசி!!!-
அல்லி மலர்கள் அள்ளி வந்தான்
அவளின் அளவில்லா ஆனந்தம் காண,
அல்லி அன்று அன்னல் முகம் கண்டு;
வள்ளியவள் துள்ளி;புன்முறுவல் இசைத்திட்டாள்.
எள்ளி நகைத்த தமிழிடம்,
சொல்லித் தீர்த சொற்கள் தேடினான்;
அவள் செவியோரம் சாய்ந்தவாரே!!-
நனைக்கும் மழையில்
கலக்கும் முன்
நல்லதோர் மழைக்காற்று வந்து
வருடிச் செல்வதுபோல்
நாம் இல்லறம் நுழைந்து
நல்லறம் நாடும் முன்
நின் மூச்சுக்காற்றில் நேசம் கமழ்ந்து
நித்தமும் என்னை
நெகிழச்செய்வதேனோ !!!-
I wish and I wonder!
The universe, with all its awesomeness;
With everything that is learnt new,
With once again making a head swirling realisation,
The maker's creative intuition is bizzarely breathtaking .
I wish and I wonder!-
இன்னமும் தீராத சண்டைகள்
இனிமையாகத் தீர்ந்திடக் காத்துக் கொண்டிருக்கின்றன!!!-