தேடி தொலைந்தேன்
தேடலை தொலைக்கவில்லை-
anonymous mr
(sam)
7 Followers · 1 Following
Joined 21 May 2018
28 AUG 2020 AT 2:07
மறந்திருந்தேன் ,
தொடுதிறையில் உன் முகம் தொடும் வரை .
நீங்காத நினைவுகள் எனை துரத்த
ஒளிய இடமின்றி ..
விசைப்பலகையில் விசாலம் அடைகிறேன் .-
3 AUG 2020 AT 2:37
உன்னோடு மீண்டும் சேரவேண்டும் என
எண்ணியதெல்லாம் எண்ணிவைத்துள்ளேன்
வாய்பளித்தால் சொல்லிவிடுவேன்
எண்ணையும் எண்ணத்தையும்.
-
13 MAR 2020 AT 21:46
இருள் சூழ்ந்த ஓர் இதயம் - அதற்கு
வெளிச்சம் பெரும் இமயம் -அதில்
இடிந்து மின்னலாய் வரும் ஒளியும்
சிறு நொடியில் விட்டு பிரியும்.-
29 FEB 2020 AT 12:39
வாய்பொன்று வாய்க்க
வரமொன்று வேண்டினேன்
வளர்வதற்கல்ல
வாழ்வதற்கு ...-
28 FEB 2020 AT 11:38
தீர்வாக வந்தாய்
தீராமல் நின்றாய் - இன்று
தீவினில் என்னை
தனிமையால் கொன்றாய்......-