நம் கல்லூரி
நாட்களிலேயே
எதிரே பார்த்து
நான் பார்த்தது
முதல் முறை
அணிய தெரியாமல்
அணிந்து வந்து
மெல்ல நடந்து வந்த
புடவையின் மறைவில்
மறைய தெரியாமல்
மறைந்திருக்குகிறது
முந்தானை அச்சம்
இடையோரா மிச்சம்
மூக்கின் மேல் மச்சம்
முகத்தில் மனக்கூச்சம்
அத்தனை அழகு
அத்தனையும் அழகு
என் சிநேகிதியே...!!
-
எப்போதும் காலோடு
சேர்ந்திருந்த கொலுசு
மறைத்து வைத்திருந்தை
நடந்து காட்டிக்கொடுத்த
ஒலித்த ஓசையையில்.
அவளின் உயரத்தை
பார்த்து உணர்ந்தேன்
நைட்டி குறைந்து
கொலுசு தெரிகிறது
அவள் வளர்ந்துவிட்டாள்..!!
-
நினைவுகள் மட்டும்
துணைக்கு துணையாக
நகரும் நேரத்தின்
நகரும் நட்சத்திரமாக
இவ்வுலகில் வாழ்வோம்
தனிமையாக அல்ல
இனிமை தரும் காற்றும்
வழிகாட்டும் நிலவுடன்
வானம் பார்த்தப் பூமியாக
நம்மை நாமே நேசிப்போம்..!!
-
சாளரம் திறந்து
தேநீர் கோப்பையுடன்
அலைவரிசையில்
ஒலித்துக் கொண்டிருந்த
கேளடி கண்மணி
பாடலைக் கேட்டு
தெருவோரம்
விழி வைக்கிறேன்
எந்தன் தேவதை
முகம் பார்த்திடவே..!!
-
மாலை நேர
தெரு வீதியில்
உன் விரல் பிடித்து
நானாக இல்லாமல்
நடந்து வரும்
குழந்தை ஆவேனா?
-
நம் எதை
தேடுகிறோமோ
அது நம்மை
தேடுகிறது - நம்
தேடல் நின்றால்,
அதை தேடும்
வேறொரு வரை
தேடுகிறது..!!
-
நினைவுகளை
நினைப்பது
காலங்களில்
சுமையில்லை
காலந்தோறும்
ஓர் சுகமானது..!!-
அகிலத்தில் திகிட்டாதது
அன்னமும் நீரும் சேர்த்து
உன் முத்தங்களும் தான்..!!
-