உன் மனவாசம் உணர்ந்து எதையும் செய்தால் பணவாசம் தானாக பெருகும்.
-
செலவின் நோக்கமே தீர்மானிக்கிறது பண விரையமா இல்லை பண முதலீடா என்று. வைத்துக்கொண்டே இருந்தால் எதுவும் வளராது.
-
நேரத்தை மிச்சமாக்க பழகியவன் பணத்தை விரைவில் சம்பாதிக்கிறான்; நேரத்தை செலவிட பழகியவன் விரைவில் பணத்தை இழக்கிறான்.
-
செய்யும் செயலை நேர்த்தியாகவும் தரமானதாகவும் கொடுங்கள் மனம் சேரும் பணம் சேரும் மாறாக மனம் வெல்லவோ பணம் பெறவோ வேலை செய்தால் அதில் முழுமை வராது திறமையும் வளராது.
-
கலை படைப்பவர்களுக்கு களைப்பு தெரிவதில்லை; இஷ்டம் உள்ள இடத்தில் ஏது கஷ்டம்.
-
செய்யும் செயலில் கவனம் இருந்தால் பிரதிபலன் தானாக வரும்; பிரதிபலனில் கவனம் இருந்தால் பெரும்பாலும் தோல்விதான் நேரிடும்.
-
மனிதனை தவிர்த்து வேறு எந்த மிருகத்திற்கும் எதிர்பார்ப்பு கிடையாது அது அது அதன் வேலையை செய்கிறது சிறப்பு பெறுகிறது...
-
உண்மையில் எழுத்து என்ன செய்யும் படிக்கும் உன் இதயத்தில் ஊடுருவி உன்னை உனக்கே காட்டி கூத்தாடும் இந்த கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள் போல...
-
விலைகொடுத்து எதையும் வாங்கிவிடலாம் என்கிறார்கள் விலை நிர்ணயம் செய்யப்படாதா எத்தனையோ உள்ளது என்பது ஏன் யாருக்கும் தெரிவதில்லை. பழைய புகைப்படம், புதுப்பிக்கபடாத மிதிவண்டி, கையால் எழுதிய கடிதம் இன்னும் பல....
-
வேண்டுதல்களால் நிரம்பி இருந்த கோவிலில் நான்மட்டும் சிலையை ரசித்தேன் அது அசைகிறது பேசுகிறது நான் பார்த்தேனென்று கூறினேன் என்னை பைத்தியம் என்றார்கள் மீண்டும் ரசித்தேன் நான் சிலையின் உருவில் கடவுளை கண்டேன் அவர்கள் வேண்டுதல் நிலையில் பைத்தியமானர்கள்...
-