வாழ பாடுபடும் மானுடம்
பிற உயிர்கள் வாழ மட்டும்
ஆயிரம் தடைகளை ஏற்படுத்துகிறது!-
இருவழிப்பாதை அன்பொரு வரம்
ஒருவழிப்பாதையெனில் அது துயரம்
பெறுவதைப்பற்றிய சிந்தனையின்றி
அன்பைத் தருவதை மட்டுமே கடனாக
கொண்டு கடக்கும்போதே மனதில் வரும்
பேரானந்தம்!
-
சாதிக்கொரு எல்லையென்று
மக்களை தரம்பிரித்த கோவில்கள்
இன்று தட்டில் விழும் பணத்தில்
மக்கள் வழிபடும் எல்லையை
நிர்ணயிக்கிறது
கால் காசு முழு காசாகும் போது
திருநீர் கிடைக்கிறது
முழுகாசும் நூறுகளாக ஆயிரங்களாக
மாறும் போது
உங்கள் மீது பூக்களோ அல்லது
கர்ப்பக்கிரகத்தின் வாயிலோ
திறக்கப்படுகிறது
அதிகார பிச்சையை தடுக்க முடியாத
கர்ப்பக்கிரக சாமிகள்
என்றோ எல்லையைக் கடந்து
ஓடியிருக்க
ஆசாமிகளால் சூழப்பட்டு
மரித்துவிட்டது பக்தி!
-
A river that flows with no barriers nurture the fields and a mind that is filled with positivity will nurture lives! Stay vibrant!
-
வளரும் பகையும் வெறுப்பும்
ஒருவர் கண் மூடி நீங்கா துயில்
கொள்ளும் போது
எங்கோ ஓடி மறைகிறது
மரிக்கும் போது
மறக்கவோ மறையவோ செய்யும்
பகைமையும் வெறுப்பும்
வாழும்போதே நிகழ்ந்துவிட்டால்
மனிதர்கள் புனிதர்களாகி விடுகிறார்கள்!-
திறமையற்ற குழந்தைகளென்று
யாருமில்லை
அறிவற்ற பெற்றோர்களும்
மூளையற்ற ஆசிரியர்களும்
திறனற்ற அரசும் சமுதாயமும்
ஆகிய சாத்தியக்கூறுகள்
வேண்டுமானால் இருக்கக்கூடும்!-
உழைப்புத் திருடி
உயிரைக் கொல்லும்
மனிதர்களென்று
வசைபாடி பறந்துச்சென்றது
தேனீயொன்று
மனிதர்கள் மூட்டிய
தழலிலிருந்து
பறந்துச்சென்ற தேனீயும்
உணவுச்சங்கிலி உடையாதிருக்க
பணி தொடர்ந்தது
பூமியின் மீதான கருணையில்
இப்படியே பல தேனீ மனிதர்களின்
நேர்மறை தியாகச் சிந்தனையில்
பல சூழ்ச்சி களங்களைத்தாண்டி
மானுடம் கொஞ்சம் தழைக்கிறது!
-
நகர்ந்தாலும்
விதி அதன் வேலையை
கச்சிதமாய்்செய்கிறது
விதிக்கு விதி விதித்து
மனதில் கனவுகள் வளர்க்க
வாசல் திறக்கிறது!-
வந்துவிடு விரைவாக
வாழ்க்கை நிறைவாக!
வந்துவிடாதே இனிமேல்
வழியில் யாருமில்லை
வாழ்ந்துப் பார்க்க
வாழ்க்கையுமில்லை!-