அழகு பூமாரி   (✍அழகுபூமாரி🪷)
119 Followers · 52 Following

ஜூன் 14 அன்று மண்ணில் பிறந்தவள்.
இவள் கவிதாயினி அல்ல, கவிதை எழுத முயற்சி செய்பவள்!
Joined 5 April 2019


ஜூன் 14 அன்று மண்ணில் பிறந்தவள்.
இவள் கவிதாயினி அல்ல, கவிதை எழுத முயற்சி செய்பவள்!
Joined 5 April 2019

முடிவா தொடரா
புரியாத புதிருக்கான
குறிப்பாக முற்றுப்புள்ளி
கிடைக்கும்போது
புதிர்கதை மீண்டும் தொடர்கதையாகிறது..!

-



உன் பதிலுக்காக காத்திருந்து
கரையும் நேரங்களால்
எனக்குக் கிடைக்கும் ரணப்பரிசு
ஒருபோதும் என்னால்
உனக்கு வழங்கப்படாது

-



மகிழ்ச்சி என்னும் பொக்கிஷம்
பலத்த பாதுகாப்பில் இருந்தாலும்
கவலைத்திருடனால் நிச்சயம்
திருடப்பட்டே தீரும்.!

-


21 SEP 2024 AT 20:12

அலறும் சத்தத்திற்கு கூட
அலட்டிக்கொள்ளாமல் கடக்கும்
அவர்களின் பின்னே
அமைதியாக தொடரும்
அலட்சியத்தைக் காண நேர்கையில்
அவசர ஊர்தி
அமரர் ஊர்தியாகிடுமோ என்ற
அச்சம் இவளுக்கு🥺

-


11 FEB 2024 AT 22:46

எந்நாளும் உன் காதலை
எதிர்பார்ப்பதையும்
எப்போதும் உன்னை நேசிப்பதையும்
என்னவன் உன்னுடன் இணைந்தகைகளை
என்றும் கைவிடமாட்டேன்
என்பதை விட
என்ன பெரிய உறுதிமொழி
என்னவனுக்கு நான் அளித்திட முடியும்
என்றறிய முடியவில்லை


-



மழை



எனக்கென யார்
என்ற எண்ணம்
எனக்குள் எழும்போதெல்லாம்
என்னை எப்படி மறந்தாய்
என்ற குரல்
எப்போதும் கேட்கும்
என் காதுகளில்..!

-


22 DEC 2023 AT 20:24

மவுனத்தை வைத்தே
மனதில் இருப்பதை அறிந்தவன்
மவுனமாகவே மாறிப்போனதும் ஏனோ.?
மங்கையிவளின் உணர்ச்சிகளை
மரத்துப்போக வைக்கத்தானோ.?

-


21 DEC 2023 AT 20:28

எதற்கு எது தேவை
என்பதை உணராவிட்டாலும்
எல்லா நேரத்திலும்
எனக்கான தேவை
என்னவன் காதல்தான்
என்பதை அவன் உணர்ந்து
என்னை அணைத்துக்கொண்டாலே
எனக்கு போதுமே..!

-


24 AUG 2023 AT 19:24

இறப்பைவிட கொடுமையான
இழப்பாக அவன் காதல்
இருந்தும்
இல்லையென வாழ்வதே
இப்பிறவியில் இவளுக்கு
இடப்பட்ட சாபமோ..?

-


23 AUG 2023 AT 20:11

மறைத்து வைக்கப்படும் காதலால்
மங்கையிவளின் மகிழ்ச்சி
மரித்துப்போகிறது என்பதை அறிந்தும்
மன்னவன் மௌனமாகவே உரையாடும்போது
மரத்துப்போகிறது இவளின் மனம்..!

-


Fetching அழகு பூமாரி Quotes