எழுலேழு ஜென்மம் ஆகினும்
எழுத்தே நீ வன்மம் கொள்கிறாய்
இறுமாப்புடன் இருக்கை கொண்டும்
இயலாமை என்றெண்ணி அச்சமாய்
உன்னை தச்சிட்டேன்
பிழை திருத்த வாராயோ !?-
எதுவாகியும் எந்தனுக்குச் சொல்லுவேன்
முழுவதும் முதலாய் ..,
கரைகாணாது தொலைந்து போவேன்
கடல்கண்டு எனை மீட்ப்பாய் !
ஈரெட்டு நேரம் உன்நினைவில் வாழ்ந்தேன்
ஓர் நாள் எனை சந்திப்பாய் ..,
" பொறு மனமே " எனக்குள் உரைத்தேன்
இருநிமிடம் நீ தாமதித்தாய் ..,
வரும் திசையில் உறைந்திருந்தேன்
சுற்றம் யாவும் வெற்றிடமாய் !
நீர் வழிய சுவர் கண்டேன்
நிஜம் புரியாதவளாய் ..,
போதும் என்கிறாய் எங்கே போவேன்
உறக்கம் தவிர்த்தேன் யோசனையாய் !
கனா கூடப் பேரின்பம் தருமாயின்
வேறென்ன கேட்பேன்
விரைந்து வருவாயா ??!-
Feel the pain being hurt..
And
The more pain on realising
You being the cause for other's hurt..-
அம்புகள் தாக்க கண்மழை பொழிந்ததே
அன்பின் அரும்புகள் நெஞ்சினில்
தேக்கிப் புதைந்ததே
பிரிவுகள் நெருக்குமாயின்
அருகாமை பிரிவதேன்?
உணர்வுகள் இயல்பாயின்
உறவுகள் செயற்கை ஏன்?
நீ சுவாசம் என்றாயினும் வீச மறுத்தாய்
பூ வாசம் என்றாயினும் கசக்கி எறிந்தாய்
எண்ணப்பிழை திருத்த எங்கே பயில்வேன்
வர்ணமிழந்தவளாய் சாட்சி ஏதுறைப்பேன-
இரகசியம் கொண்டேன்
செயற்கை ஆனது பந்தம்
இரகசியம் பகிறந்தேன்
வெறுப்பை வளர்த்தது அண்டம்
என்ன நான் செய்வது
எந்தன் உணர்வு இது
இரகசியம் ஏதற்கடா
பிறர் காயப்படுவாராயின்
இகழும் யோசனை அகற்றடா
நேசம் கொண்டோரின்
அன்பை உணர்வாயடா-
கண்ணீர் பெறுகக் காரணம் ஆனேன்
கேள்வி நீ வினவ விடை அறியேன்
கணமாய் என் நெஞ்சம் பொறுக்கவில்லை
உன் கோபம் கொஞ்சம்
கேளாமல் கொடுப்பாய் எல்லை நீ அறியாய்
கலங்காமல் நீ இருப்பாய் இனிமை நீ அறிவாய்
கையில் ஏந்திக் குழந்தையாய் தாலாட்ட
கரங்கள் இல்லையே என்னிடம்
கரைபடிந்தனவே அவை
குற்றம் இழைத்துக் கரைபடிந்தனவே
மன்னிப்பாய மீண்டும்
அக்க்ஷயா-
காத்திருக்கக் கவிதை
நீ என்றால் நான் ஆவேன்
போ என்றால் காற்று ஆவேன்
சிலை என்றாய் சிற்பி நானே
நிழல் என்றாய் அதுவும் நானே
நீர் பருக தாகம் வந்தது
கண்ணீர் பெருகி தேகம் நனைந்தது
காதல் மலர ஏக்கம் கொண்டேன்
வாசம் தேடி நீ வருவாயென
கவிதை உதிர வேடிக்கை கண்டேன்
வாசல் வழி பார்வை வீசியபடி
என்றும் காத்திருக்க
வருவாயா நீ ???-
மனிதனை வெறுக்கிறேன்
வஞ்சப் புகழ்ச்சி உரைக்கிறான்
கொய்தே என்னை சிதைக்கிறான்
தேன் பகிர காத்துகிடக்க
நானும் இங்கே பூத்துக்கிடக்க
பரித்தாய் என் மலர்ச்சியை
-- மலர்-
ஓரிரு
ஓரிரு வார்த்தைகளில் கவி எழுதினேன்
இருவர் ஒன்றாய் சேர..
இருமாப்பாய் நீ கிழித்த
ஒரு துண்டு காகிதம் கூட
ஒருபோதும் வாசிக்கும் காதலை..
இருமனம் இனய இமையாதிருப்பேன்-