வழிவது குருதி என்று நீ கூறும் வரை,
என் உணர்வின் பெயர் வலி என்று எனக்குத் தெரியவில்லை!-
புயல் காற்றில் பறந்த புத்தகத்தின் ஒற்றை காகிதமாய், உன் கையில்.
விழுந்த என்னை விரித்துக் கூட பார்க்காமல்
கசக்கி எறிந்து விட்டாய்!
இன்று, குப்பை தொட்டியில் கிடக்கிறது,
என் காதலும் கவிதையும்.-
நள்ளிரவில்
வெண்மதியோடும்,
உன் நினைவில்
நிம்மதியோடும்,
நான் செய்யும்
உரையாடல்களை
நீ அறிவாயோ?
கண்ணம்மா!-
டூ வீலர் வாங்குவது டூ காஸ்ட்லி என்பது மாறி,
கார் வாங்குவது கம்பல்சரி என்றானபோதும்,
மகிழ்ச்சி என்னவோ மிதிவண்டியின் முன் சீட்டிலேயே நின்றுவிட்டது!-
என் தனிமையை திமிர் எனவும்
அமைதியை அகம் எனவும்
எண்ணிய உலகில்,
என் சிரிப்பில் இருந்த சிதரலையும்
வார்த்தைகளில் இருந்த வெறுமையையும்
கண்ட முதல் உயிர் நீ!-
சொன்னால் புரியுமா?
எனை காப்பதாக அவர்களிட்ட வேலியில்
படிந்த முதல் இரத்தம் என்னுடையது என்று?-
And that's why I do not let people in!
Because its not the maddening chaos that I grieve,
But the deafening silence when they leave!-
துன்பம் நேர்ந்த போதெல்லாம் உளியாய் உன்னை செதுக்கும் என்றார்கள்,
இறுதியில் நான் கற்சிலை ஆகிவிடுவேன் என்பதை மறந்து!-
தூக்கம் இழந்த என் கண்களும்
துருவ நட்சத்திரமாக மின்னுதடி!
உன் ஐஞ்சிறு விரல்கள் என் ஓர் விரலைப் பிடித்ததும்!-