இவளின் மன தைரியத்துக்கு ஈடாக ஒரு எரிமலையே இடம்பெயரும் ... வெட்கத்தின் இலக்கியமும் இவளே....! அடக்கத்தின் இலக்கணமும் இவளே ....! சகிப்புத்தன்மையின் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டும் இவளே ....! இப்படி பலத் தனித்தன்மைகள் தன்னிடம் இருந்தாலும் ,"தாய்மை" என்னும் தன்னுடைய புனிதத் தன்மையை காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் வைத்துப் போராடுகிறாள் ....தாய், தமக்கை ,தாரம்,தோழி, என ஒரு ஆண்மகனுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையின் அச்சாரமாய் வழிநடத்தி.... தனக்கென பல தடைகள் வந்தாலும் அதையெல்லாம் கட்டுக்கடங்காத தைரியம் ,மன உறுதி, ,ஆற்றல், வலிமையோடு தகர்த்தெரிந்து அவளும் வாழ்ந்து காட்டுகிறாள் ,ஏனெனில் அவள் ஒரு "ஆச்சரியக்குறி "..!
பெண்ணே...உனக்கு நன்றிகள் பல...! உன் புகழ் ஓங்குக......!!
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ❤️
-
A untold love story between me and pen @speaking pens 🙌❤
👨🏻⚕Doct... read more
தாய்மொழி,
தொப்புள் கொடி உறவைப் போன்று ஒரு தொலைக்க முடியாத அடையாளம்!!
எத்தனையோ தூரங்கள் பயணித்து சென்றாலும் தாயையும் தாய்மொழியையும் மறக்க இயலுமா??
உதிரத்தில் கலந்த ஒரு பந்தம்
தாய் மொழி "தமிழ்"
என்றும் நம்மை வாழவைக்கும்
தமிழைப் போற்றுவோம்...!! இவ்வுலகில் இறுதி மூச்சு உள்ளவரை....!!!-
ஒவ்வொரு குழந்தையும்,
சகிப்புத் தன்மையோடு, கேட்டு உறங்கிய ஒர் கசப்பான தாலாட்டு, அப்பாக்களின் "குறட்டை ஒலி"......!-
பிறப்பு முதல் வாழ்கின்ற இந்த தருணம் வரையில்..
எல்லாம் வல்ல அந்த இறைவன் நம்மை இயக்கிக் கொண்டிருக்க
வாழ்நாளின் இறுதி நாள் அறியாது சுவாரசிய தடத்தில் தான் வாழ்க்கை பயணிக்கிறது...
இந்த சுவாரசிய தடத்தில் பன்னிரண்டு மாதங்கள் என்ற கணக்கில் பல்லாண்டுகளை காணலாம்...அந்த வருடங்களில் சில உண்மையான உறவுகள் தந்த மகிழ்ச்சியான தருணங்களும்,
நம் வாழ்க்கையின் தடத்திலிருந்து ஒதுங்கிய மனிதர்கள் தந்த அனுபவங்களும்,
எல்லாம் வல்ல அந்த ஆண்டவனின் கடைக்கண் பார்வையும்,
நம்முடைய கடின உழைப்பும், தேடல்களும், அசைக்க முடியாத நம்பிக்கையும்
நம் வாழ்க்கையை வழிநடத்தும்...
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு முடிகின்ற இந்த வருடம், இந்த பூமியில் வாழவைக்கிறதே...!
இதுபோதும்... இதற்கு மிஞ்சிய ஒரு நல்ல ஆண்டு கிடையாது...!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்......!
-
தூறல்கள் மழையாக மாறும் என்று நினைக்கையில் கலைந்து போகும் மேகங்கள் தரும் ஏமாற்றத்தின் வலி
விழிகள் சிந்தும் கண்ணீர் துளிகளுக்கு காரணமாய் ....!-
சிங்களத் தீவில் ஓர் நாள் ....🇱🇰💫 பசுமையான நினைவுகள் .... என் வாழ்க்கையின் பக்கங்களில் தனிப்பட்ட வாசனையோடு நினைவிருக்கும் தருணங்கள் .... அதிர்ஷ்டவசமான நாள்.... சுயநலத்தோடு சென்றேன்
நீர்கொழும்பு என்னை வரவேற்றது.... இந்த ஒற்றை நாள், எனக்கு அறிமுகம் செய்த மனிதர்கள் ஏராளம்.... ஏதோ அழுத்தமான உணர்வு என்னுள் அழுத்தியது..... இன்றளவும்.. முகங்கள் மறக்கமுடியாத
உணர்வோடு கலந்த உறவுகள்.... வெறும் இருபதுமணி நேர பயணம் ... ஆனால் வாழ்நாள் இறுதி வரை மறக்கமுடியாத நினைவுகள்....
என்றும் எனது விழித்திரைக்குள் ஆனந்தக் கண்ணீரை ஆர்ப்பரிக்க செய்யும் காட்சிகளாய்....!!!-
தடியும் ,தாடியும் தன்னுடைய அடையாளமாய்...
ஈரோட்டில் எழுந்த புரட்சியின் பூகம்பமாய்...
சாதி, தீண்டாமை, பெண்ணுரிமை மறுப்பு போன்ற சமூகத்தின் சீர்கேடுகள்
தமிழகத்தில் தலைவிரித்து ஆடிய காலத்தில், வாழ்நாளில் இறுதி வரை ஓடி ஓடி உழைத்து, தமிழினத்தையே தலைநிமிர செய்து, சுயமரியாதையுடன் வாழ வைத்துக் கொண்டிருப்பவர் பெரியார்!
இந்த ஒருவர் மட்டும் இல்லையெனில்...
மூடர் கூட்டம் நம்மை முடக்கி வைத்திருக்கும்...
கடவுளை மறந்து மனிதனுக்கு மாண்பு அளித்தவர் பெரியார்!!
எப்படி இவருக்கு இவ்வளவு பெரிய மனது ....!!!
ஏனெனில் அவர் "பெரியார்"-
தாய்க்குப் பின் இவ்வுலகில் தன்னலமற்ற ஜுவன்
நமக்கு கற்பிக்கும் ஆசான் மட்டுமே!!
சிலையைச் செதுக்க உதவும் உளியாய்...
இருண்ட உள்ளத்தில் ஏற்றப்படும் அறிவு என்னும் விளக்கின் ஒளியாய்...
எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி,
யாரோ பெற்ற பிள்ளைக்கு,
தான் கற்ற அனைத்தையும் ஒரு படி மேலாய் போதித்து,
தன் மாணவர்களுக்காக
தன் வாழ்வையே அர்ப்பணிக்கும்
அத்தகைய ஆசானை மறந்து வாழ்வோமாயின்
இன்று ஓர் நாளாவது
நினைவில் வணங்கிடுவோம்.....!!!
"இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்".-
உன் (யானைகளின்) மீதான நான் கொண்டுள்ள தனிப்பட்ட அன்பை எழுத்து வடிவமாக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை...!
விலங்குகளில் நீ ஆகப் பெரிய உருவத்தைக் கொண்டு இருந்தாலும் உண்மையில் சொல்லப் போனால் நீ அதிகம் "பாசம் வைத்த ஒரு முட்டாள்"...!
உன்னைப் பார்த்தவுடன் என் நான் பெரும் இன்பம் நிபந்தனையற்றது...!
இதுவரை நான் கண்ட பேராசை ஒன்றே ஒன்றுதான் உன்னை மற்ற செல்லப்பிராணிகளை போல என் வாழ்நாளில் நான் வளர்க்கவேண்டும்...
துன்புறுத்தல்கள் இருக்கும் தருணத்தில் உனக்கும் கோபங்கள் வரத்தான் செய்கிறது.... ஆயினும் நீ ஓர் குழந்தையே....!!!❤️-
தூரத்தில் மலர்ந்த தொப்புள்கொடியாய்...!
தேடலுடன் தொடரும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் நாம் அனைவரும் தேடிக் கண்டெடுத்த "சிப்பிக்குள் முத்தாய்"...!
நாம் பெற்ற உறவுகளின் உன்னதமாய்...!
துவண்ட பொழுது தூக்கி நிமிர்த்தி,
தடம் மாறும் தருணத்தில் தவற்றினைச் சுட்டிக்காட்டி,
இங்கு காலங்கள் மாறலாம், காட்சிகள் மாறலாம்;
நட்பின் சுவடுகளான சில அழுத்தமான நினைவுகளும், உணர்வுகளும் என்றும் நம்மை இணைக்கும்...!
இந்த புனிதத்தைத் கொண்டாட இந்த ஒரு நாள் மட்டும் போதுமா?, அனுதினமும் கொண்டாட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது....!!!!!💯
"HAPPY FRIENDSHIP DAY"❣️-