abi logi  
152 Followers · 35 Following

read more
Joined 5 April 2019


read more
Joined 5 April 2019
1 JUL 2020 AT 11:40

சிறுவயதில் ஒரு பெண் குழந்தை
உடல் பருமனாக இருந்தாலும்
அவளை மார்போடு அணைத்து
கொஞ்சும் சமுதாயம்..
அவளின் வளர்ந்த பருவத்தில்
"குண்டு"என்று பெயர் சூட்டி கேலி,கிண்டல்,செய்வதற்க்கு
காரணம் என்ன??

-


1 JUL 2020 AT 11:29

வாழ்க்கையின் இருபக்கங்கள்... "சந்தோஷத்தில்" பங்குகொள்பவர்கள்
(உறவுகள்,நண்பர்கள்,குடும்பம்)..
"துக்கதில்" பங்குகொள்பவர்கள் (நண்பர்கள்) மட்டுமே...

-


1 JUL 2020 AT 11:17

வீட்டினை சுமக்கும்
தூண்களை போல..
சுவற்றில் பதிக்கப்பட்ட
ஒவ்வொரு கற்களும்
ஒவ்வொரு கதையை
சுமக்கின்றன...

-


1 JUL 2020 AT 10:35

தனிமையில்
உன்னுடன்
கைகோர்த்து
செலவழிக்கும்
நாழிகையில்..
என் உடலில்
அசையும்
நரம்புகள்
யாவும் உன்
நாமத்தை தீண்டி
கொண்டிருக்கின்றது...

-


1 JUL 2020 AT 10:19

என் உடல் உனது நன்மையான
செயலை கண்டு நெகிழும் வேளையில்..
"நன்றி" என்ற மூன்று எழுத்து சொல் என் உதடுகள் கதைக்கும்...

-


1 JUL 2020 AT 10:03

முதுகில் குத்துபவன்
கோழையும் அல்ல..
நேருக்கு நேர் மோதுபவன்
வீரனும் அல்ல...
சூழலுக்கு ஏற்ப
போராடி வெல்பவனே
-"வீரன்"

-


30 JUN 2020 AT 9:34

எப்பொழுதும் ஒரு கூட்டமாய்....
கூட்டத்தில் கருப்போ,சிவப்போ,
குட்டையோ,நெட்டையோ
என்ற பாகுபாடுக்கு இடமில்லை....
கூட்டத்தில் இருந்து சிரிப்புகள்
முத்து முத்தாக வானில் தெறிக்கும்...
நம் கஷ்டத்தை கண்டு அழுகைக்கு தோள்
கொடுக்கும் ஒரே உறவுகள்...
என்றும் நமக்காக வாழ்பவர்கள்...
கடவுள் எதிர்பார்க்காமல் ஒரு
சிலருக்கு கொடுத்த வரம் 'நண்பர்கள்'...
இப்பாக்கியம் "தவம்
புரிந்தாலும் "எல்லாருக்கும் அமையாது...


-


29 JUN 2020 AT 15:38

புதிய பாதையை தேடி
சென்னை வந்தடைந்தான்
-"விவசாய மைந்தன்"
அவன் அறிந்த வித்தையெல்லாம்
சிங்கார சென்னையில்
கைகொடுக்கவில்லை....
கையில் இருந்த காந்தி தாத்தாவும்
கரைந்து போக...ஒருபக்கம்...
வங்கியில் பெற்ற கடன்
அவன் கழுத்தை நெருக்க....
என்ன செய்வதென்று அறியாமல்
ஒரு ஜான் கயிற்றில் தன்
முடிவை தேடி கொண்டான்....
அவன் உயிரோடு இருக்கும் போது
கிடைக்காத மதிப்பு இறந்த பிறகு கிட்டியது...

-"விவசாயி மரணத்தில்".....

-


29 JUN 2020 AT 12:57

மழை நீர்
மண்ணொடு
குழைந்து
உண்டாகும்
மணம்...
குழந்தையின்
உதட்டில்
வீசும்
பால் வாடை..
மனதிற்க்கு
புத்தம் புதிய
உணர்ச்சியை
கூட்டும்..

-


29 JUN 2020 AT 11:52

நம் மன உறுதியை
சோதிக்கும் தருணம்...

-


Fetching abi logi Quotes